Thursday, May 6, 2021

நோய் தொற்று இருந்து காத்துக்கொள்ள முடியும்


*நோய் தொற்றுக்கு காலத்தில் செய்ய வேண்டிவை*
---------------------------------------------------------
*ஆவி பிடித்தல்*
__________________
நொச்சி இலை, நுணா இலை
(மஞ்சனத்தி இலை),
யூக்கலிப்ட்ஸ் இலை 
இவைகளை வெந்நீரில் இட்டு காலை மாலையில் ஆவி பிடிக்க வேண்டும் (நுகர வேண்டும்). 


கொரோனா தொற்று நுரையீரலை பாதிக்கும். அதற்க்கு ஆவி பிடித்து காத்துக்கொள்ளலாம்.
-------------------------------------------------------------------
*நோய் எதிர்ப்புச் சக்தி*
__________________________
நமது உடலில் எதிர்ப்பு சக்தி வளர மற்றும் கொரோனா நோயிலிருந்து நம்மை காப்பாற்ற " இயற்கை மருத்துவம்.

1. துளசி டீ அருந்தவும்.

2. சுக்கு, மிளகு, திப்பிலி கசாயம் அருந்தவும்.

3. இரண்டு நாட்களுக்கு ஒருமுறை மஞ்சள், மிளகு, பூண்டு கலந்து பால்

குடிக்கவும்.

4. வேது பிடிக்கவும் (குழந்தைகளும்).
---------------------------------------+--------------------------
*ஆரோக்கியமான உடல்*
____________________________
வீட்டில் அனைவரும் உடல், உள்ளம் ஆரோக்கியமாக இருக்க டும் என்று தினமும்  சிறுதானியக்கஞ்சி அதில் வேப்பிலை, மஞ்சள், துளசி, மிளகு சேர் ம் ஒரு முறையாவது அருந்த வேண்டும். கஞ்சி சூடான பத்தில்
இருப்பது நன்று.
  
முக்கியமானது இனிப்பு, மசாலா இரண்டையும் தவிர்க்கவும்.

!. நாட்டுக்காய்கறிகளை உண்ணவும்.

1. எப்பொழுதும் இயற்கையான, காற்றோட்டமான இடத்தில் இருக்க வேண்டும்.

2.உணவில் கட்டாயமாக உப்பு, காரம், புளியை குறைத்து உண்ண வேண்டும்.

3. சோளக் கஞ்சி, சிறுதானியக் கஞ்சி, சோற்று நீர், நொய் அரிசி சாதம் சாப்பிட வேண்டும். ஏனெனில், உணவே மருந்தாகும்!

4. ஃபேன் (fan), குளிர்பானங்கள் (cool drinks), குளிர்சாதனப்பெட்டி (A/C), தொடர்ந்து படம் பார்த்தல், செல்ஃபோன் உபயோகித்தல் ஆகியவற்றின் தினசரி பயன்பாட்டின் நேரத்தை குறைத்துக் கொள்ள வேண்டும்.

5. இருக்கும் இடத்தை சுத்தமாக வைக்க வேண்டும். சாக்கடை, கழிவுநீர் தேக்கத்தைத் தவிர்க்க வேண்டும்.

6.காலை, மாலை, இரவு என்ற நேரப்படி உடல் ஆரோக்கியத்தைக் காக்க வேண்டும். நல்ல உறக்கம் இருக்க வேண்டும். கொரோனா காலத்தில் விருந்துகளைத் தவிர்க்க வேண்டும்.

7. குடிப்பழக்கம், புகைப்பிடிப்பவர்களை கொரோனா அதிகமாகத் தாக்கும்.

8. அச்சம் தவிர்க்க வேண்டும்.
-------------------------------------------------------------------
*இயற்கை மருநது நீர்*
_________________________
1. சுக்கு 2. மிளகு 3. திப்பிலி

4. புதினா 5.கொத்தமல்லி

இவற்றை நீரில் கலந்து காய்ச்சி நாட்டு சர்க்கரை சேர்த்து அருந்தவும்.
குறிப்பு:
________


இருமல் அல்லது காய்ச்சல் உள்ளவர்கள் அருந்தலாம்.

தேவையானப் பொருட்கள்:
 1. சுக்கு, மிளகு, திப்பிலி பொடி - 1/4

தேக்கரண்டி 
2. ஒரு கைப்பிடியளவு புதினா

3. ஒரு கைப்பிடியளவு கொத்துமல்லி 4. தேவையான அளவு பனங்கற்கண்டு

அல்லது நாட்டுச்சர்க்கரை

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீரை ஊற்றி, மேற்கூறிய தேவையான பொருட்கள் அனைத்தையும் சேர்த்து கொதிக்க விடவும். கசாயம் பாதியாக சுண்டியவுடன் இறக்கி சிறிது ஆறியவுடன்

இளஞ்சூடாக பருகவும்




------------------------------------------------------------
நோய் தொற்றுலிருந்து காத்துக்கொள்ள முடியும். கொரோனாவிலிருந்து உங்களை தற்காத்து கொள்வதற்கான சிறந்த வழி இருக்கும்.

.வேப்பிலையின் முக்கியத்துவம்:

"மற்ற இலைகளை விட

வேப்பிலைக்குக் கசப்புத் தன்மை அதிகம் உண்டு. அதனால் தான் புழு, பூச்சிகள் பிறப்பதில்லை. அந்தக் கசப்புத் தன்மை தெய்வத்தன்மைக்குச் சமம். அதனால் வேப்பிலைக்குத் தனி முக்கியத்துவம் உண்டு."

1 comment: