Saturday, May 1, 2021

திருக்குறள்

குறள் 941:.
மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர் 
வளிமுதலா எண்ணிய மூன்று.

Tamil meaning
வாதம், பித்தம், சிலேத்துமம் என்று மருத்துவ நூலோர் கணித்துள்ள மூன்றில் ஒன்று அளவுக்கு அதிகமானாலும் குறைந்தாலும் நோய் உண்டாகும்


குறள் 948:.
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் 
வாய்நாடி வாய்ப்பச் செயல்.

Tamil meaning
நோய் என்ன? நோய்க்கான காரணம் என்ன? நோய் தீர்க்கும் வழி என்ன? இவற்றை முறையாக ஆராய்ந்து சிகிச்சை செய்ய வேண்டும். (உடல் நோய்க்கு மட்டுமின்றிச் சமுதாய நோய்க்கும் இது பொருந்தும்).


திருக்குறள் கூறும் மருத்துவம்
திருக்குறளின் மருந்து அதிகாரத்தில், மனிதர்கள் ஆரோக்கியமாக வாழ சில ஒழுக்கங்களையும், மனிதர்களுக்கு நோய்கள் உண்டாகும் காரணத்தையும், நோய்கள் அண்டாமல் தடுக்கும் வழிமுறைகளையும். ஒருவேளை நோய்கள் உண்டானால் அவற்றை குணப்படுத்தும் எளிய வழிமுறைகளையும் கற்றுத்தருகிறார் திருவள்ளுவர்


No comments:

Post a Comment