Sunday, August 28, 2022

சகல ஐஸ்வர்யங்களும் செல்வ வளங்களும் வாரி வழங்க இருக்கிறார்கள் ஸ்ரீ விநாயகப்பெருமான்




சுபகிருது வருடம் 
ஆவணி மாதம் 15ஆம் நாள்.
 
31-08-2022 ஓர் அற்புதமான நாள் 
சகல ஐஸ்வர்யங்களும் 
செல்வ வளங்களும் 
வாரி வழங்க இருக்கிறார்கள்        
ஸ்ரீ விநாயகப்பெருமானும் 

ஆம் 
விநாயகர் சதுர்த்தி 
சிறப்பு பூஜை   
             
வாய்ப்பைத் தவற விடாதீர்கள்
 காலை விநாயகர் சதுர்த்தி 


பூஜை பொருட்கள்

பிள்ளையார், அரிசி, மஞ்சள், மஞ்சள், குங்குமம், சந்தனம், அறுகம்புல்,கற்பூரம்,கணபதிக்கு உடுத்த ஒரு பட்டுத் துணி அல்லது காவி துணி. பூ, அருகம் புல் அல்லது எருக்கம்பூ மாலை, தேங்காய், வாழைப்பழம், வெற்றிலைப் பாக்கு.

நைவேத்திய பொருட்கள் :

வாழைப்பழம், உள்ளிட்ட பழங்களை வைக்கவும். விநாயகருக்குப் பிடித்த கொழுக்கட்டை, உள்ளிட்ட இனிப்பு வகைகள், பலகாரங்கள்

ஒரு பலகையை எடுத்து அதை சுத்தம் செய்து, கோலமிட்டு, அதன் மீது பிள்ளையார் சிலையை வைக்கவும். அவருக்கு மஞ்சள் அல்லது சந்தனத்தால் பொட்டு வைத்து, அதன் மீது குங்கும திலகம் இடுங்கள்.

பிள்ளையார் சிலைக்கு முன் ஒரு பித்தளை தட்டு வைத்து, அதில் சிறிது அரிசியை போட்டு அதன் மீது ஒரு தூய வெற்றிலை வைக்கவும். பின்னர் மஞ்சள் தூளுடன் சிறுது தண்ணீர் ஊற்றி பிள்ளையார் பிடித்து, வெற்றிலை மீது வைக்கவும்.

தனங்களையும் செல்வ வளங்களையும் அள்ளித்தரும் செல்வ விநாயகர் மந்திரம் 108 முறை பாராயாணம் பண்ணவும்
👇👇👇👇👇👇
 ஓம் நமோ ஹேரம்ப மதமோதித ஹஸ்தி முகாய
மம ஸ்வர்ண ப்ராப்தம் குருகுரு ஸ்வாஹா!

Saturday, August 20, 2022

வாராஹி மாலை


(Alice in Wonderland)  by Lewis Carroll

(The wonderful wizard of Oz) l. Frank Baum 

Best story books link 🖇️🔗

👇👇👇👇👇👇👇👇👇👇👇

Story books

https://www.amazon.in/s?k=Alice+in+Wonderland+book&linkCode=ll2&tag=dps079-21&linkId=8055b9bb79f501a2df1f8ba066080b55&language=en_IN&ref_=as_li_ss_tl




வாராஹி மாலை



1. வசீகரணம்

இருகுழை கோமளம் தாள் புஷ்பராகம் இரண்டுகண்ணும்

குரு மணி நீலம் கை கோமேதகம் நகம் கூர்வயிரம்

திருநகை முத்துக் கனிவாய் பவளம் சிறந்தவல்லி

மரகத நாமம் திருமேனியும் பச்சை மாணிக்கமே


2. காட்சி

தோராத வட்டம் முக்கோணம் ஷட்கோணம் துலங்குவட்டத்து

ஈராறிதழ் இட்டு ரீங்காரம் உள்ளிட் டது நடுவே

ஆராதனை செய்து அருச்சித்துப் பூஜித்தடி பணிந்தால்

வாராதிராள் அல்ல வோலை ஞான வாராஹியுமே.


3. பகை தடுப்பு

மெய்ச்சிறத்தாற்பணியார் மனம் காயம் மிகவெகுண்டு

கைக்சிரத் தேந்திப் புலால்நிணம் நாறக் கடித்துதறி

வச்சிரத் தந்த முகப்பணியாற் குத்தி வாய்கடித்துப்

பச்சிரத்தம் குடிப்பாளே வாராஹி பகைஞரையே


4. மயக்கு (தண்டினி தியானம்)

படிக்கும் பெரும்புகழ்ப் பஞ்சமி அன்பர் பகைஞர்தமை

அடிக்கும் இரும்புத் தடிகொண்டு பேய்கள் அவர்குருதி

குடிக்கும் குடர்கொண்டு தோள்மாலை இட்டுக் குலாவிமன்றில்

நடிக்கும் வாராஹி பதினா லுலகம் நடுங்கிடவே.


5. வெற்றி ஈர்ப்பு

நடுங்கா வகைஅன்பர் நெஞ்சினிற் புக்கவர் நண்ணலரைக்

கொடும்காளி உண்ணக் கொடுக்கும் குருதிகள் கொப்பளித் திட்

டிடும்பாரக் கொங்கையின் மீதே இரத்தத் திலகம் இடும்

தொடும்கார் மனோன்மணி வாராஹிநீலி தொழில் இதுவே.


6. உச்சாடணம் (ரோகஹரம்)

வேய்க்குலம் அன்னதிண்தோளாள் வாராஹிதன் மெய்யன்பரை

நோய்க்குலம் என்ன இடும்பு செய்வார்தலை நொய்தழித்துப்

பேய்க்குலம் உண்ணப் பலிகொண்டு போட்டுப் பிணக்குடரை

நாய்க்குலம் கௌவப் கொடுப்பாள் வாராஹி என் நாரணியே.


7. எதிர்ப்புக் கட்டு (சத்ருஹரம்)

நாசப் படுவர் நடுங்கப்படுவர் நமன் கயிற்றால்

வீசப் படுவர் வினையும் படுவர்இம் மேதினியோர்

ஏசப் படுவர் இழுக்கும் படுவர் என் ஏழைநெஞ்சே

வாசப் புதுமலர்த் தேனாள் வாராஹியை வாழ்த்திலரே


8. பெருவச்யம் ( திரிகால ஞானம்)

வாலை புவனை திரிபுரை மூன்றும் இவ் வைகயத்திற்

காலையும் மாலையும் உச்சியும் ஆக எக் காலத்துமே

ஆலயம் எய்தி வாராஹிதன் பாதத்தை அன்பில் உன்னி

மாலயன் தேவர் முதலான பேர்களும் வாழ்த்துவரே.


9. பகை முடிப்பு

வருத்திப் பகைத்தீர் என்னோடறியாமல் வானவர்க்காச்

சிரித்துப் புரம் எரித்தோன் வாம பாகத்துத் தேவி எங்கள்

கருத்திற் பயிலும் வாராஹி என் பஞ்சமி கண்சிவந்தாற்

பருத்திப் பொதிக்கிட்ட தீப்பொறி காணும் பகைத்தவர்க்கே


10. வாக்கு வெற்றி

பாப்பட்ட செந்தமிழ்ப் பாவாணர் நின்மலர்ப் பாதம் தன்னிற்

பூப்பட்டதுவும் பொறிபட்டதோ? நின்னை யேபுகழ்ந்து

கூப்பிட்ட துன்செவி கேட்கிலையோ? அண்ட கோளமட்டும்

தீப்பட்ட தோ? பட்டதோ நிந்தை யாளர்தெரு எங்குமே.


11. தேவி வருகை

எங்கும் எரியக் கிரிகள் பொடிபட எம்பகைஞர்

அங்கம் பிளந்திட விண்மண் கிழித்திட ஆர்த்தெழுந்து

பொங்கும் கடல்கள் தவறிடச் சூலத்தைப் போகவிட்டுச்

சிங்கத்தின் மீது வருவாள் வாராஹி சிவசக்தியே.


12. ஆத்ம பூஜை

சக்தி கவுரி மஹமாயி ஆயிஎன் சத்துருவைக்

குத்தி இரணக் குடரைப் பிடுங்கிக் குலாவிநின்றே

இத்திசை எங்கும் நடுங்கக் கிரிகள் இடிபடவே

நித்தம் நடித்து வருவாள் வாராஹி என் நெஞ்சகத்தே


13. தேவிதாபனம் (பில்லி மாரணம்)

நெஞ்சகம் தன்னில் நிறைந்திருக் கின்றவன் நிர்க்குணத்தி

நஞ்சணி கண்டத்தி நாரா யணிதனை நம்புதற்கு

வஞ்சனை பண்ணி மதியாத பேரைவாழ் நாளை உண்ணக்

கொஞ்சி நடந்து வருவாள் வாராஹி குலதெய்வமே.


14. மந்திரபூஜை

மதுமாமிஸம்தனைத் தின்பாள் இவள் என்று மாமறையோர்

அதுவே உதாஸினம் செய்திடுவார் அந்த அற்பர்கள்தம்

கதிர்வாய் அடைத்திட உள்ளம் கலங்கக் கடித்தடித்து

விதிர் வாளில் வெட்டி எறிவாள் வாராஹி என் மெய்த் தெய்வமே.


15. வாராஹி அமர்தல் (மூர்த்தி தியானம்)

ஐயும் கிலியும் எனத்தொண்டர் போற்ற அரியபச்சை

மெய்யும் கருணை வழிந்தோடுகின்ற விழியு(ம்) மலர்க்

கையும் பிரம்பும் கபாலமும் சூலமும் கண் எதிரே

வையம் துதிக்க வருவாள் வாராஹி மலர்க்கொடியே


16. வரம் பொழிதல்

தாளும் மனமும் தலையும் குலையத் தரியலர்கள்

மாளும் படிக்கு வரம் தருவாய்: உன்னை வாழ்த்தும் அன்பர்

கோளும் பகையும் குறியார்கள் வெற்றி குறித்த சங்கும்

வாளும் கடகமும் சூலமும் ஏந்தி வரும் துணையே !


17. வாழ்த்துதல்

வருந்துணை என்று வாராஹி என்றன்னையை வாழ்த்திநிதம்

பொருந்தும் தகைமையைப் பூணா தவர் புலால் உடலைப்

பருந்தும் கழுகும்வெம் பூதமும் வெய்ய பிசாசுகளும்

விருந்துண்ணப் பட்டுக் கிடப்பர்கண்டீர் உடல் வேறுபட்டே.


18. நன்னீர் வழங்கல்

வேறாக்கும் நெஞ்சம் வினையும் வெவ்வேறு வெகுண்டுடலம்

கூறாக்கும் நெஞ்சத்திற் செந்நிறம் ஆன குருதிபொங்கச்

சேறாக்கும் குங்குமக் கொங்கையிற் பூசும் திலகம் இடும்

மாறாக்கும் நேமிப் படையாள் தலைவணங்காதவர்க்கே.


19. புனித நீர் அருந்துதல்

பாடகச் சீறடிப் பஞ்சமி அன்பர் பகைஞர்தமை

ஒடவிட் டேகை உலக்கைகொண் டெற்றி உதிரம் எல்லாம்

கோடகத் திட்டு வடித்தெடுத் தூற்றிக் குடிக்கும் எங்கள்

ஆடகக் கும்ப இணைக்கொங்கையாள் எங்கள் அம்பிகையே.


20. மலர் வழிபாடு

தாமக் குழலும் குழையும் பொன் ஒலையும் தாமரைப்பூஞ்

சேமக் கழலும் துதிக்கவந் தோர்க்கு ஜெகம் அதனில்

வாமக் கரள களத்தம்மை ஆதி வாராஹிவந்து

தீமைப் பவத்தைக் கெடுத்தாண்டு கொள்வாள் சிவசக்தியே.


21. தேவி சந்நிதானம் (கர்ம மூலபந்தனம்)

ஆராகிலும் நம்க்கேவினை செய்யின் அவர் உடலும்

கூராகும் வாளுக் கிரை இடுவாள்கொன்றை வேணிஅரன்

சீரார் மகுடத் தடி இணை சேர்க்கும் திரிபுரையாள்

வாராஹி வந்து குடி இருந்தாள் என்னை வாழ்விக்கவே.


22. தேவி துதி மாலை (ஜன்ம துக்க நாசனம்)

தரிப்பாள் கலப்பை என்அம்மை வாராஹிஎன் சத்துருவைப்

பொரிப்பாள் பொறிஎழச் செந்தீயில் இட்டு பொரிந் ததலை

நெரிப்பாள் தலைமண்டை மூளையைத் தின்றுபின் நெட்டுடலை

உரிப்பாள் படுக்க விரிப்பாள் சுக்காக உலர்த்துவளே.


23. புகழ்சொற்பாமாலை (மௌனாந்த யோகம்)

ஊரா கிலும் உடன் நாடாகிலும் அவர்க் குற்றவரோடு

யாரா கிலும்நமக் காற்றுவரோ? அடல் ஆழி உண்டு

காரார் கருத்த உலக்கையும் உண்டு கலப்பை உண்டு

வாராஹி என்னும்மெய்ச் சண்டப் பிரசண்ட வடிவிஉண்டே.


24. படைக்கள வாழ்த்து (பதஞான யோகம்)

உலக்கை கலப்பை ஒளிவிடு வாள்கட காழிசங்கம்

வலக்கை இடக்கையில் வைத்த வாராஹிஎன் மாற்றலர்கள்

இலக்கம் இல்லாத எழிற்பெரும் சேனை எதிர்வரினும்

விலக்கவல்லாள் ஒரு மெல்லிதன் பாதம் விரும்புகவே.


25. பதமலர் வாழ்த்து (பிரதிபந்த நாசன யோகம்)

தஞ்சம் உன் பாதம் சரணா கதிஎன்று சார்ந்தவர்மேல்

வஞ்சனை பில்லி கொடிதேவல் சூனியம் வைத்தவரை

நெஞ்சம் பிளந்து நிணக்குடல் வாங்கி நெருப்பினிலிட்(டு)

அஞ்சக் கரங்கொண் டறுப்பாள் திரிபுரை ஆனந்தியே.


26. படைநேமி வாழ்த்து (சித்தனானந்த யோகம்)

அலைபட்டு நெஞ்சம் அலைந்துயிர் சோர அலகைக் கையால்

கொலைபட் டுடலம் கழுகுகள் சூழக் குருதி பொங்கித்

தலைகெட்டவயவம் வேறாய்ப் பதைப்புற்றுச் சாவர்கண்டீர்

நிலைபெற்ற நேமிப் படையாள் தனைநினை யாதவரே


27. அடியார் வாழ்த்து (அர்ச்சனானந்த யோகம்)

சிந்தை தெளிந்துனை வாழ்த்திப் பணிந்து தினம்துதித்தே

அந்தி பகல் உன்னை அர்ச்சித்தபேரை அசிங்கியமாய்

நிந்தனை பண்ணி மதியாத உலுத்தர் நிணம் அருந்திப் 

புந்தி மகிழ்ந்து வருவாய் வாராஹிநற் பொற்கொடியே.


28. திருப்படை வந்தனம் (அம்ருதானந்த யோகம்)

பொருப்புக்கு மாறுசெய் ஆழியும் தோடும் பொருப்பைவென்ற

மருப்புக்கு நேர்சொலும் கொங்கையும் மேனியும் வாழ்த்தும் என(து)

இருப்புக் கடிய மனதிற் குடிகொண்டு எதிர்த்தவரை

நெருப்புக் குவால் எனக் கொல்வாய் வாராஹி என் நிர்க்குணியே


29. பதமலர் வந்தனம் (கைவல்யானந்த யோகம்)

தேறிட்ட நின்மலர்ப் பாதார விந்தத்தைச் சிந்தை செய்து

நீறிட் டவர்க்கு வினைவரு மோ? நின் அடியவர்பால்

மாறிட் டவர்தமை வாள் ஆயுதம் கொண்டு வாட்டிஇரு

கூறிட் டெறிய வருவாய் வாராஹி குலதெய்வமே.


30. சித்தி வந்தனம் (ஆனந்த யோகம்)

நரிபரி ஆக்கிய சம்புவின் பாகத்தை நண்ணியமான்

அரி அயன் போற்றும் அபிராமி தன் அடியார்க்கு முன்னே

ஸரியாக நின்று தருக்கம் செய் மூடர் தலையைவெட்டி

எரியாய் எரித்து விடுவாள் வாராஹி எனும் தெய்வமே.


31. நவகோண வந்தனம் (நித்யானந்த யோகம்)

வீற்றிருப்பாள்நவ கோணத்திலே நம்மை வேண்டும் என்று

காத்திருப்பாள்கலி வந்தணுகாமல் என் கண்கலக்கம்

பார்த்திருப்பாள் அல்லள் எங்கே என்றங்குச பாசம் கையில்

கோத்திருப்பாள் இவளே என்னை ஆளும் குலதெய்வமே.


32. நிறைமங்கலம் (சிவஞான யோகம்)

சிவஞான போதகி செங்கைக் கபாலி திகம்பரிநல்

தவம் ஆரும் மெய்யன்பர்க் கேஇடர் சூழும் தரியலரை

அவமானம் செய்யக் கணங்களை ஏவும்அகோரி இங்கு

நலமாக வந்தெனைக் காக்கும் திரிபுர நாயகியே.

Friday, July 15, 2022

சங்கடஹர சதுர்த்தி சனிக்கிழமை விரதம்

 

<!-- Global site tag (gtag.js) - Google Ads: 10934757944 -->

<script async src="https://www.googletagmanager.com/gtag/js?id=AW-10934757944"></script>

<script>

  window.dataLayer = window.dataLayer || [];

  function gtag(){dataLayer.push(arguments);}

  gtag('js', new Date());


  gtag('config', 'AW-10934757944');

</script>



சங்கடஹர சதுர்த்தி சனிக்கிழமை விரதம்






Subscribe now


விநாயகப் பெருமானை வழிபாடு செய்வதற்கு பல விரத தினங்கள் இருந்தாலும், விரதத்தில்க

மிகச் சிறந்ததும், சங்கடங்கள் அனைத்தையும் தீர்க்கக்கூடிய சங்கடஹர சதுர்த்தி

இன்று சனிக்கிழமை விரதம்

இருந்தால் அளவுக்கடந்த ஆனந்தத்தை அடையலாம்

சகல

சௌபாக்கியங்களையும் பெறலாம்






 விநாயகர் சுலோகம் துதி:

சுக்லாம் ப்ரதரம்: விஷ்ணும்

சசிவர்ணம் சதுர்புஜம்;

ப்ரசன்ன வதனம் த்யாயேத்

சர்வவிக்நோப சாந்தயே 


விநாயகர் துதி மந்திரம் 12 முறை உச்சரிக்கவும்.







Saturday, July 2, 2022

Sunday, February 20, 2022

 

காப்பு

அருவுரு ஆன அன்னலே அற்புத சுடரே  சுயம்பு பின் திருவுரு வே  சுடரின்  ஒளியே  திருநிலையில் ஒருநிலை கொண்ட பெரியாண்டவர் கவசம் இதனை எண்ணி வழிபடுவோர் துன்பம் நீங்கி என்றுமே இன்பம் வரும்


நூல் 

அருளின் அருளே ஆனந்த ஜோதியே 






சித்தர்களின் பொன்மொழி

1. மனம்


மனைவி, மக்கள், தாய், தந்தை அனைவருடனும் சேர்ந்து வாழுங் கள்.அவர்களுக்கான எல்லாக் கட | மைகளையும் செய்யுங்கள். ஆனால் மன்தை மட்டும் இறைவனிடம் செலுத்துங்கள். குடும்ப உறவு களோடு சேர்ந்து வாழும் அதே வேளையில், அவர்கள் உன்னுடை யவர்கள் அல்ல என்பதையும் உணர்ந்து கொள்.


-ஸ்ரீராமகிருஷ்ணர்.


2. ஆயுளின் பெருமை ஆண்டுகளில் இல்லை, வாழும் முறையில்தான் இருக்கிறது.


3. கடவுளைக் காண முற்படுகிறவன் பக்தன்!!! அவனைக் கண்டுணர்ந்தவன் சித்தன்!!!


4. தேவைக்காக இறைவனை தேடாமல் தேவையே நீதான் இறைவா என்றிறு! உன் இதயமே இறைவன் சன்னதியாகும் உன் வாக்கே இறையருளாகும்! அகத்தியர் அருள்வாக்கு!


5. தர்மத்தின் வழி செல்ல செல்ல கர்மத்தின் வலி குறையுமப்பா.


அகத்தியர் 

6. அற்புதம் நிறைந்த இவ் உடலை அற்பமாய் இழந்துவிடாதே மானிடா!!


சமநீதி 


7. ஒருவன் எம்மை நாடாவிட்டாலும் பரவாயில்லை! மெய்யாகவே தர்மவானாக, எல்லா நிலைகளிலும் நல்லவனாக. தன் மனசாட்சிப்படி வாழ்ந்து வந்தால், அவன் எம்மை தேடவேண்டாம். யாமே அப்படிப்பட்ட மனிதனைத் தேடிச் செல்வோம். அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!"







Wednesday, February 16, 2022

ஸ்ரீ பெரியாண்டவர் 108 போற்றி//Sri pariyandaver 108 pootri


பௌர்ணமி,மஹாசிவராத்திரி,பிரதோசம், ஞாயிற்றுக்கிழமை மற்றும் அமாவாசை பூஜை களின் போது, ஸ்ரீ பெரியாண்டவர் 108 போற்றி படித்து பயன் பெறுங்கள் 



 விநாயகர் வணக்கம்


மும்மூர்தி  முதல் வோனே 

மூலாதார கணபதியே 

ஞானப் பழத்தை வென்ற விநாயக

பிரணவ மந்திரத்தின் ஒளியே 

மூல பரம் பொருளை வணங்குகின்றேன்                           விநாயக போற்றி !



குரு வணக்கம்




குருவை வணங்குகின்றேன்

குரு உபதேசத்தை வணங்குகின்றேன்

குரு பார்வை வணங்குகின்றேன்

குரு மந்திரம் வணங்குகின்றேன் 

குரு அருளை வணங்குகின்றேன் 

குரு தட்சிணாமூர்த்தி பாதத்தை வணங்குகின்றேன் 

வணங்குகின்றேன் வணங்குகின்றேன் வியாழன் கிழமையில் குருவை 




ஸ்ரீ பெரியாண்டவர் 108 போற்றி 







1. ஓம் ஸ்ரீ பெரியாண்டவர் சுவாமி போற்றி ஓம் 

2. ஓம் திருநிலை பெரியாண்டவா போற்றி ஓம்

3. ஓம் சிவசங்கரனே பெரியாண்டவா போற்றி ஓம் 

4. ஓம்  கைலாசநாத பெரியாண்டவா போற்றி ஓம் 

5. ஓம் ஓம் சக்தி பெரியாண்டவா போற்றி ஓம்

6. ஓம் உலகை வலம் வந்த பெரியாண்டவா போற்றி ஓம்

7. ஓம் தாயின் கருவின்றி பிறந்த பெரியாண்டவா போற்றி ஓம்

8. ஓம் பெரிய மனிதர் உருவில் தோன்றிய பெரியாண்டவா போற்றி ஓம்

9. ஓம் ஈசனின் அம்சம்மே பெரியாண்டவா போற்றி ஓம்

10. ஓம்  தரிசனம் தந்த பெரியாண்டவா போற்றி ஓம் 

11. ஓம் செல்வம் தரும் பெரியாண்டவா போற்றி ஓம்

12. ஓம் கல்வி தரும் பெரியாண்டவா போற்றி ஓம் 

13. ஓம் உண்மை உணர்த்தும் பெரியாண்டவா போற்றி ஓம்

14. ஓம் குழந்தை வரம் தரும் பெரியாண்டவா போற்றி ஓம்

15. ஓம் முக்தி தரும் பெரியாண்டவா போற்றி ஓம்

16. ஓம் தர்மம் காத்த பெரியாண்டவா போற்றி ஓம்

17. ஓம் குலதெய்வம் பெரியாண்டவா போற்றி ஓம்

18. ஓம் சுயம்பு லிங்க பெரியாண்டவா போற்றி ஓம் 

19. ஓம் மானிடம் காக்க வந்த பெரியாண்டவா போற்றி ஓம் 

20. ஓம் அருள் தருவதில் முதற் கடவுளே பெரியாண்டவா போற்றி ஓம் 

21. ஓம் ஒருநிலையாய் திருநிலையில்  அமர்ந்த பெரியாண்டவா போற்றி ஓம் 

22. ஓம் கண்ணிற்கு காட்சி தந்த பெரியாண்டவா போற்றி ஓம்

23. ஓம் சிவ சக்தி  பெரியாண்டவா போற்றி ஓம்

24. ஓம் அர்த்தநாரீஸ்வர பெரியாண்டவா போற்றி ஓம்

25. ஓம் பூமியில் பாதம் பதித்த பெரியாண்டவா போற்றி ஓம்

26. ஓம் பிரபஞ்சத்தின் இயக்கமே பெரியாண்டவா போற்றி ஓம் 

27. ஓம் திறந்தவெளியில் அமர்ந்த பெரியாண்வா போற்றி ஓம்

28. ஓம் குருவான பெரியாண்டவா போற்றி ஓம்

29. ஓம் பெரியோனே பெரியாண்டவா போற்றி ஓம்

30. ஓம் எமையாளும் பெரியாண்டவா போற்றி ஓம்

31. ஓம் சுகம் தரும் பெரியாண்டவா போற்றி ஓம்

32. ஓம் சூலாயுதம் ஏந்திய பெரியாண்டவா போற்றி ஓம்

33. ஓம் நல்வாழ்வை தரும் பெரியாண்டவா போற்றி ஓம்

34. ஓம் நலம் காக்கும் பெரியாண்டவா போற்றி ஓம்

35. ஓம் வளம் சேர்க்கும் பெரியாண்டவா போற்றி ஓம்

36. ஓம் பலம் சேர்க்கும் பெரியாண்டவா போற்றி ஓம்

37. ஓம் குலம் காக்கும் பெரியாண்டவா போற்றி ஓம்

38. ஓம் வெற்றி தரும் பெரியாண்டவா போற்றி ஓம்

39. ஓம் பஞ்சம் போக்கும் பெரியாண்டவா போற்றி ஓம்

40. ஓம் லிங்க வடிவே பெரியாண்டவா போற்றி ஓம்

41. ஓம் மனக்குறை தீர்க்கும் பெரியாண்டவா போற்றி ஓம்

42. ஓம் கற்சிலை  பெரியாண்டவா போற்றி ஓம்

43. ஓம் சக்தி தரும் பெரியாண்டவா போற்றி ஓம்

44. ஓம் வரம் தரும் பெரியாண்டவா போற்றி ஓம்

45. ஓம் நடமாடும் பெரியாண்டவா போற்றி ஓம்

46. ஓம் வீரம் தரும் பெரியாண்டவா போற்றி ஓம்

47. ஓம் விபூதி காப்பு பெரியாண்டவா போற்றி ஓம்

48. ஓம் மஞ்சள் காப்பு பெரியாண்டவா போற்றி ஓம்

49. ஓம் நவ தானியம்  காப்பு பெரியாண்டவா போற்றி ஓம்

50. ஓம் நவ கோல் ஆலூம் பெரியாண்டவா போற்றி ஓம்

51. ஓம் மண் உருவம் கொண்ட பெரியாண்டவா போற்றி ஓம்

52. ஓம் சிவனடியார்களுக்கு அருள்புரிந்த பெரியாண்டவா போற்றி ஓம்

53. ஓம்  பன்றி உருவில் வந்த பெரியாண்டவா போற்றி ஓம்

54. ஓம் ஜோதி வடிவே பெரியாண்டவா போற்றி ஓம்

55. ஓம் ஒளி வீசும் இடமே பெரியாண்டவா போற்றி ஓம்

56. ஓம் பன்னீரால் அபிஷேக உவந்த பெரியாண்டவா போற்றி ஓம்

57. ஓம் எதிர்மறை எண்ணங்கள் நீங்கிய பெரியாண்டவா போற்றி ஓம்

58. ஓம் அமைதி தவழும் பெரியாண்டவா போற்றி ஓம்

59. ஓம் வானமே கூரையாக கொண்ட பெரியாண்டவா போற்றி ஓம் 

60. ஓம் ஞாயிற்றுக்கிழமையில் அருள் தருவாய் பெரியாண்டவா போற்றி ஓம்

61. ஓம் சித்தர்களுக்கு அருள் புரிந்த பெரியாண்டவா போற்றி ஓம்

62. ஓம் சுந்தரபத்திரனை அழிக்க உரு எடுத்தாய பெரியாண்டவா போற்றி ஓம் 

63. ஓம்  விமோசனம் தந்த பெரியாண்டவா போற்றி ஓம்

64. ஓம் உமாதேவி சாபத்தால் உருவான பெரியாண்டவா போற்றி ஓம்

65. ஓம் மலர் அலங்காரத்தில் காட்சி தந்த பெரியாண்டவா போற்றி ஓம்

66. ஓம் தியான ஒளியே பெரியாண்டவா போற்றி ஓம்

67. ஓம் தாய், தந்தை நீயே பெரியாண்டவா போற்றி ஓம்

68. ஓம் உலக மக்கள் காக்கும் பெரியாண்டவா போற்றி ஓம்

69. ஓம் நீரில் குளித்த பெரியாண்டவா போற்றி ஓம்

70. ஓம் இன்பம் தரும் பெரியாண்டவா போற்றி ஓம்

 71. ஓம் எத்திசை ஆலூம் பெரியாண்டவா போற்றி ஓம்

72. ஓம் ஐயா பெரியாண்டவா போற்றி ஓம்

73. ஓம் ஆதி சங்கரர் பெரியாண்டவா போற்றி ஓம்

74. ஓம் ருத்ர பெரியாண்டவா போற்றி ஓம்

75. ஓம் தேவர் போற்றிய பெரியாண்டவா போற்றி ஓம்

76. ஓம் தேவ தேவா பெரியாண்டவா போற்றி ஓம்

77. ஓம் நீலகண்ட பெரியாண்டவா போற்றி ஓம்

78. ஓம் உயிரை காக்கும் பெரியாண்டவா போற்றி ஓம்

79. ஓம் பூமி காக்கும் பெரியாண்டவா போற்றி ஓம்

80. ஓம் மண் உருவில் வந்து அருள் தந்த பெரியாண்டவா போற்றி ஓம்

81. ஓம் பைரவ மூர்த்தி பெரியாண்டவா போற்றி ஓம் 

82. ஓம்  27 நட்சத்திர திக்கு அருள் தரும் பெரியாண்டவா போற்றி ஓம்

83. ஓம் பூமாதேவி மடியில் படுத்த பெரியாண்டவா போற்றி ஓம்

84. ஓம் 12 ராசிக்கு நன்மை தரும் பெரியாண்டவா போற்றி ஓம்

85. ஓம் பெரிய நாயகன பெரியாண்வா போற்றி ஓம்

86. ஓம் கனவில் தோன்றிய பெரியாண்டவா போற்றி ஓம்

87. ஓம் அஸ்வினி தேவா பெரியாண்டவா போற்றி ஓம்

88. ஓம் உடல் நலம் தந்த பெரியாண்டவா போற்றி ஓம்

89. ஓம் மனதில் வந்த பெரியாண்டவா போற்றி ஓம்

90. ஓம் ஏழை எளிய மக்களுக்கு அருளும் பெரியாண்டவா போற்றி ஓம்

91. ஓம் முற்பிறவி பாவம் போக்கும் பெரியாண்டவா போற்றி ஓம்

92. ஓம் அறம் வளர்க்கும் பெரியாண்டவா போற்றி ஓம் 

93. ஓம் முதியவர் உருவே பெரியாண்டவா போற்றி ஓம்

94. ஓம் 7 சக்கரம் ஒளி வீசும் பெரியாண்டவா போற்றி ஓம்

95. ஓம்  அருளே அற்புதமே பெரியாண்டவா போற்றி ஓம் 

96. ஓம் இன்னிசைப்பிரியனே பெரியாண்டவா போற்றி ஓம்

97. ஓம் பக்தர்க்கு எளியவனே பெரியாண்டவா போற்றி ஓம்

98. ஓம் அகந்தை அழித்த பெரியாண்டவா போற்றி ஓம்

99. ஓம் மந்திரம் ஒளி பெரியாண்டவா போற்றி ஓம்

100. ஓம்  நமசிவாய பெரியாண்டவா போற்றி ஓம்

101. ஓம் மங்கள தீர்த்தம் பெரியாண்டவா போற்றி ஓம்

102. ஓம் பஞ்சம் போக்கும் பெரியாண்டவா போற்றி ஓம்

103. ஓம் துணை வரும் பெரியாண்டவா போற்றி ஓம்

104. ஓம் துன்பம் துடைக்கும் பெரியாண்டவா போற்றி ஓம்

105. ஓம் தீய சக்தி அழிக்கும் பெரியாண்டவா போற்றி ஓம்

106. ஓம் காற்று சக்தி பெரியாண்டவா போற்றி ஓம்

107. ஓம் 21 சிவ கணங்கள் அருள் புரிந்த பெரியாண்டவா போற்றி ஓம்

108. ஓம் எம் குலம்  தழைக்க வந்த பெரியாண்டவா போற்றி ஓம்


ஓம் பெரியாண்டவர் சுவாமியே போற்றி ஓம் 

ஓம் பெரியாண்டவர் சுவாமியே போற்றி ஓம் 

ஓம் பெரியாண்டவர் சுவாமியே போற்றி ஓம் 

                                 ஓம்

                                 ஓம்

                                  ஓம் 

                            









Composed by: sudhakar
Published on : February. 16. 2022

Monday, November 8, 2021

அதர்வண வேதம் பிரம்மவேதம் எனப்படும்

அதர்வண வேதம் பிரம்மவேதம் எனப்படும். இது 731 பாடல்களைக் கொண்டு 20 பகுதிகளாக உள்ளது.[1] இது உச்சாடனம் மாந்ரீகம் போன்றவற்றால் தீயசக்திகளையும் எதிரிகளையும் வென்று உலகத்தில் வெற்றி பெறும் வழிகளைக் கூறுவது எனலாம்.சில்ப வேதம் அதர்வண வேதத்தின் உபவேதமாகும் . இது கட்டடக் கலையை விவரிக்கின்றது.


Download and read


அதர்வண வேதத்தின் தலைவியின்
108 திருவுரு மந்திரம்




Share this அதர்வண வேதம் தமிழ்

Monday, September 27, 2021

அதர்வணபத்ரகாளி 108 போற்றித் திருவுரு



அதர்வணபத்ரகாளி
இந்து சமயப் பெண் தெய்வம் ஆவார். பிரத்யங்கரா தேவி சக்தியின் உக்கிரமான வடிவங்களில் ஒன்றாகும். இவர் சிம்ம முகமும், பெண் உடலும் கொண்டு காணப்படுகிறார். இந்து தொன்மவியலின் படி பிரத்தியங்கரா விஷ்ணு, காளி, துர்க்கை ஆகியோரின் வடிவமாகவும் கருதப்படுகிறார். அதர்வணபத்ரகாளி நான்கு சிங்கங்கள் பூட்டிய ரதத்தில் சிம்ம முகத்தோடும் எட்டு கைகளோடும், மிகக் கோபமான பார்வையோடும், உக்கிரமான வேகத்தோடும் காணப்படுகிறாள்.

ஏவல், பில்லி, சூனியம், மாந்திரிகம், வைப்பு முதலானவை நீங்கிவிடும்.

அதர்வணபத்ரகாளி 108 போற்றித் திருவுரு மந்திரத்தைச் சொல்லி ஜபியுங்கள். ஆத்மார்த்தமாக வேண்டிக்கொள்ளுங்கள். துஷ்ட சக்திகளையெல்லாம் அண்டவிடாமல் நம்மைக் காத்தருள்வாள் தேவி.

செவ்வாய்க்கிழமையன்று என்றில்லாமல், எந்தநாளும் இந்த 108 போற்றி மந்திரத்தைச் சொல்லி பாராயணம் செய்து வழிபடுங்கள்.


                      ஓம்சக்தி!

அதர்வணபத்ரகாளி 108 போற்றித் திருவுரு
                      மந்திரம்



Download and 
Share 

Friday, September 24, 2021

மேல்மருவத்தூர் நவராத்திரி

*நவராத்திரி காப்புகள் - விளக்கம்*

நவராத்திரி காப்பின் வகைகள் பின்வருமாறு:

1. தங்கக் கவசம் 
2. குங்குமக் காப்பு 
3. மஞ்சள் காப்பு 
4. சிறுதானியங்கள் காப்பு 
5. வேப்பிலை காப்பு 
6. துளசி காப்பு 
7. விபூதி காப்பு 
8. சந்தனக் காப்பு 
9. நவதானியக் காப்பு 
10. மிட்டாய் காப்பு 
11. உலர் பழங்கள் காப்பு 

*"நவராத்திரி காப்பில் பங்கு பெறுவதால் 5 தலைமுறைகளைக் காப்பேன்" என்பது அன்னையின் அருள்வாக்கு.* 

காப்பு என்ற சிறப்பு அலங்காரம் அன்னையின் அருள் பாதுகாப்பினை நமக்குப் பெற்றுத் தருகிறது.

நவராத்திரி காப்பு இன்றைய உலகத்தில் இருக்கும் பல பிரச்சனைகளை உணரவும், அதிலிருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ளவும் நவராத்திரி காப்பு உதவும்.

*தங்கக் கவசம்*

1. தங்கம் போன்ற குணம் பெற, நல்ல சிந்தனைகளை நாம் பெற, தர்மத்திற்கும், அன்பிற்கும், பக்திக்கும், பாசத்திற்கும், தான் எப்போதும் கவசமாக விளங்குவதை உணர்த்த அம்மா இந்தத் 
தங்கக் கவசத்தை அணிகிறாள். 

2. "பங்காரு" என்றால் தங்கம் என்று பொருள். இப்பூவுலகில் தருமத்தை நிலைநாட்ட "பங்காரு" என்ற திருப்பெயர் கொண்ட அம்மாவின் உள்ளே இருந்து நம்மைக் காப்பதையும் இந்த காப்பு நமக்கு உணர்த்துகிறது.

3. தங்கத்தினை நெருப்பில் இட்டு அதனைத் தூய்மை பெறச் செய்து விரும்பியபடி நகை செய்து கொள்வதைப் போல உலகியலில் பல துன்பங்களையும், சோதனைகளையும், அம்மாவின் துனையுடன் நாம் கடந்து வந்தால், அம்மாவின் அருள் என்ற அமுதம் நமக்குக் கிடைக்கும் என அன்னை நமக்கு இதன் மூலம் புரியவைக்கிறாள்.

*குங்குமக் காப்பு*

1. மகாலட்சுமி வாசம் செய்யும் குங்குமக் காப்பு.

2. 'ஓம் குங்கும மேனி கொண்டாய் போற்றி ஓம்' என்ற அன்னையின் மந்திரமே இதற்கு அருள் சாட்சியாக விளங்குகிறது.

3. பொருளாதாரக் கஷ்டங்கள், கடன் தொல்லைகள், சிக்கல்கள், வழக்குகள், மன நிம்மதியின்மை, ஆகியவற்றில்
இருந்து காப்பது குங்குமக் காப்பு.

4. காலனையும் வெல்லும், வியாபார முன்னேற்றம் அளிக்கும்.

5. செல்வவளம் தரும். 

*மஞ்சள் காப்பு*

1. மங்கலம் தரும் மஞ்சள் காப்பு

2. மஞ்சள் சிறந்த கிருமி நாசினியாகும். வீட்டில் நல்ல நாட்களில் மஞ்சள் நீர் தெளித்தால், அமைதியும், சாந்தமும், உடல் ஆரோக்கியமும் நிலவும்.

3. கிராமங்களிலும், நகரங்களிலும், தெய்வங்களின் தேரோட்டத்திற்கு முன்னர் மஞ்சள் நீர் தெளிப்பது வழக்கம்.

4. அம்மாவின் அருள் ஆசி பெற்று நடக்கும் ஆன்மீக ஊர்வலங்கள், ஆன்மீக பாதயாத்திரைகள், அனைத்திலும் மஞ்சள் நீரை முதலில் தெளித்தபடி ஒரு பக்தர் செல்வது வழக்கம்.

5. பெண்கள், குடும்பத்தில் நல்ல நாட்களில், மஞ்சள் தேய்த்துக் குளிப்பது வழக்கம்.

6. பெண்களின் திருமாங்கல்யத்தில் குங்குமப் பொட்டு வைத்துக் கொள்வதன் மூலம் அன்னையின் அருளால் அவர்கள் தாலிபாக்கியம் மேலும் வலுப்பெறுகிறது.

7. குழந்தைப்பேறு இல்லாத தம்பதிகள் பலரும் அன்னையை வேண்டி நம் சித்தர்பீட சன்னதியில் தொட்டில் கட்டுவது போல, திருமணமாகாத ஆடவரும், பெண்களும் ஒரு மஞ்சள் கயிற்றில் விரலி மஞ்சள் கிழங்கு முடித்து, சித்தர்பீட சன்னிதியில் அன்னையை நினைத்துக் கட்டுவதால் திருமணப்பேறு உண்டாகிறது.

8. எளிமையானவர் முதல் செல்வந்தர் வரை அனைவராலும் பயன்
படுத்தக்கூடிய இந்த மஞ்சளை அன்னையை விரும்பி ஏற்று மகிழ்கிறாள்.

*சிறுதானியக் காப்பு*

1. கம்பு, கேழ்வரகு, தினை, சாமை, குதிரைவாலி, சோளம் ஆகிய சிறுதானியங்கள் அளவில் சிறியதாக இருந்தாலும் அவற்றின் சக்தி மிகப் பெரியதாகும்.

2. மற்ற தானியங்களை விட 3 முதல் 5 மடங்கு வரை சக்தி வாய்ந்தது இந்தச் சிறுதானியங்கள்.

3. சிறுதானிய உணவு வகைகளை நாம் சாப்பிட்டு உடல் ஆரோக்கியம் பெற்று நோய்கள் இன்றி வாழவும் அம்மா நமக்கு வழிகாட்டுகிறாள்.

4. சிறிது, பெரிது, என்ற எண்ணம் தனக்கு இல்லை என்றும் உணர்த்துகிறாள்.

*வேப்பிலைக் காப்பு*

1. குடும்பப் பிணி நீங்கும்.

2. ஏவல், பில்லி, சூனியம் ஆகியவை பறந்தோடிப் போகும்.

3. பிரசாதமாக இதனை உண்ண, நோய் பறந்து விடும்.

4. நோய் எதிர்ப்பு சக்தி பெருகும்.

5. வேம்பின் கீழ் பாலாக அன்னை வெளிப்பட்டதன் மூலமாகவும், வேப்பிலை ஏந்தி அருள் கோலத்தில் வெளிபடுவதன் வாயிலாகவும், இந்த வேப்பிலையின் மகத்துவத்தை நம்மால் உணர முடிகிறது.

6, உலகில் பல ஆயிரம் வகைகளில் மரங்கள் இருந்தாலும், வேப்பமரம் நமது சித்தர்பீடத்தின் தலவிருட்சமாக விளங்குகிறது.

7. வேப்பிலை காப்பினை அருள் திரு அம்மா அவர்களே அம்மா காப்பு என்று அழைப்பதன் மூலம் இதன் சிறப்பினை நாம் உணரலாம்.

*துளசிக் காப்பு*

1. துளசியை நம் நாட்டில் வாழ்ந்த ஒரு பெண்ணாகப் போற்றி மகிழ்வர்.

2. துளசிச் செடியைத் தெய்வமாக மதித்து வணங்குவது நமது இயல்பாகும்.

3. காக்கும் கடவுளான திருமாலுக்கு உகந்தது துளசி.

4. மருத்துவ குணங்களும் இந்த இலைக்கு உண்டு.

5. முறையாக விரதம் இருக்கும் பல ஆன்மீக அன்பர்களும், துளசி தீர்த்தம் அருந்திய பிறகே தங்கள் விரதத்தைப் பூர்த்தி செய்வர்.

6. துன்பங்களில் இருந்து நம்மைக் காக்கும் தூயவளான அன்னை விரும்பிச் சூடும் துளசி காப்பு.

*விபூதிக் காப்பு*

1. விபூதி என்றால் 'ஐஸ்வர்யம்' என்று பொருள்.

2. சித்தர்கள் விபூதியை மறைபொருளாகக் குறிப்பிடுகின்றனர். இந்த விபூதி, 4448 நோய்களைத் தீர்க்கக் கூடியது.

3. நமது உடலில் 11 இடங்களில் இந்த விபூதியைப் பூச வேண்டும், என்றும் அந்த 11இடங்களில் ருத்ரர்களின் தேவியர் வாசம் செயவதாகவும், ஆன்மீகப் பெரியவர்கள் கூறுகின்றனர்.

4. அன்னைக்குச் செய்யப்படும் இந்த விபூதி காப்பு அலங்காரம் வழியாக அன்னைக்கு இந்த பதினோரு தேவியரும் நம் உடலுக்கும், உள்ளத்திற்கும், பல நன்மைகளை புரிகின்றனர்.

*சந்தனக் காப்பு*

1. சந்தனம் பூசிக்கொள்பவருக்குக் குளிர்ச்சியைத் தருவது போல, அம்மாவும் தன்னை வழிபடுபவர் வாழ்வில் குளிர்ச்சியையும், அவரவர் மனங்களில் குளிர்ச்சியையும் அளிக்கிறார்கள்.

2. 'ஓம் சந்தனச் சாந்தணி உகப்பாய் போற்றி ஓம்' என்ற மந்திர வரியும் அன்னைக்கு சந்தனம் மிகவும் பிடிக்கும் என்று கூறுகிறது. 

3. சில பக்தர்களுக்கு, சந்தனக்காப்பின் மூலம் சந்தானம், அதாவது குழந்தை வரம், அன்னை அருளியிருக்கிறாள்.

4. சந்தனம் அபிஷேகப் பொருளாகவும், நறுமணம் வீசும் பொருளாகவும் உள்ளது. நமது ஆன்மா குளிர்ச்சி பெற்று, நம்வாழ்வு நறுமணத்துடன் விளங்க அன்னைக்குச் சந்தனகாப்பு.

*நவதானியக் காப்பு*

1. 'நவ' என்றால் ஒன்பது என்றும் புதியது என்றும் பொருள்.

2. நவகிரகங்களைக் குறிக்கிறது அவற்றின் விபரம் பின்வருமாறு:

*தானியம்* - *கிரகம்*

-கோதுமை - சூரியன் 

-நெல் - சந்திரன் 

-துவரை - செவ்வாய் 

-பாசிப்பயறு - புதன் 

-கொண்டைக் 
கடலை - வியாழன்(குருபகவான்)

-அவரை/
மொச்சை - வெள்ளி

-எள் - சனி 

-உளுந்து - ராகு

-கொள்ளு - கேது 

3. நவகிரகங்களைச் சாந்தப்படுத்தும் நவதானிய காப்பு.

4. கிரகக் கோளாறுகள், தோஷங்களில் இருந்து காக்க வல்லது.

5. ஜாதகமும் நமக்கு சாதகமாகும்.

*மிட்டாய் காப்பு*

1. 'குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று' என்றும் 'குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில்' என்றும் கூறுவது போல குழந்தைக்குப் பிடித்தமான மிட்டாயைக் காப்பாக அணியும் அன்னை, தானும் குழந்தை உள்ளம் படைத்தவள் என்று நமக்கு உணர்த்துகிறாள்.

2. மிட்டாய் இனிப்பாக இருப்பதைப் போல் எந்நேரமும் நமக்கு இன்பத்தை அதாவது பேரின்பத்தை அளிக்கப்போவதாக அம்மா இங்கே உணர்த்துகிறார்கள்.

*கற்கண்டுக் காப்பு*

1. கற்கண்டு என்ற புனிதப் பொருள் தெய்வங்களுக்குப் படைக்கக்கூடிய நைவேத்திய பொருளாகும்.

2. கற்கண்டு கரும்பில்லிருந்து பெறப்படும். கரும்பு விவசாயம் பனை விவசாயம் ஆகியவை செழிக்க உதவும்.

*உலர் பழங்கள் காப்பு*

1. உலர் பழங்கள் மாறுபட்ட வெப்ப நிலைகளிலும் அதன் சத்துகளையும், சுவையையும் இழப்பதில்லை. அதுபோல உலகில் பல சூழ்நிலைகள் மாறினாலும், "அன்னையை அடைய வேண்டும்" என்ற எண்ணத்தை நாம் கடைபிடிக்க வேண்டும்.

2. வெளிநாடுகளில் இருந்தும், நம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விளைந்து வருகின்ற இந்த உலர் பழங்களை அன்னை, தான் சூடிக் கொள்வதன் மூலமாக, அனைத்து உலகிற்கும் தான் தாய், என்றும் எல்லா மக்களும் தன் குழந்தைகள் என்றும் உணர்த்துகிறாள்.

*லட்சார்ச்சனை வழிபாடு*

1. லட்சம் முறை அன்னையின் திருப்பெயர் உச்சரிப்பது லட்சார்ச்சனை. குடும்பமும் நலமுடன் வளம் பெற்று, அவரவர் லட்சியங்கள் நிறைவேற இந்த வழிபாடு நடக்கிறது.

2. அன்னையின் சித்தர் பீடத்தில் அன்னையின் 1008, 108 மந்திரங்கள் ஒலிக்கும் அதே நேரத்தில், பதிவு செய்தவர் பெயர் மற்றும் நட்சத்திரம் கூறி சங்கல்பம் செய்யப்படுகிறது.

3. லட்சார்ச்சனையில், நம் பெயர், நம் குடும்பத்தார் பெயருக்கு மட்டுமல்லாமல், நம்முடைய வண்டி, வாகனங்கள் எண்ணிற்கும், பணிபுரிகின்ற தொழில் நிறுவனங்கள், கடைகள், ஆகியவற்றின் பெயருக்கும் செய்யலாம்.

4. லட்சார்ச்சனை பிரசாதத்தினை (அன்னையின் திருவுருவப்படம், மஞ்சள், குங்குமம்,) அன்னையின் வழிபாட்டு மன்றங்கள் வாயிலாகவும், சித்தர் சக்தி பீடங்கள் மூலமாகவோ அல்லது மேல்மருவத்தூர் சித்தர் பீடத்திலோ பதிவு செய்து பெற்று கொள்ளலாம்.

தகவல்: நன்றி சக்தி ஒளி - 11/2018.

*..................ஓம் சக்தி......................*

Monday, August 16, 2021

பெரியாண்டவர் துதிப்பாமாலை

ஸ்ரீ பெரியாண்டவர் துதிப்பாமாலை




திருநீற்றை மருந்தாக்கி உறுநோயை போக்கிட்ட குருவான பெரியாண்டவா கருக்கொள்ள வரம் வேண்டி வருகின்ற மாந்தர்க்கு தருகின்றாய் மகவல்லவா

விதிதன்னின் வலியாலே
விழிசோர்ந்து அழுவோர்க்கு
வழிகாட்டி நீயல்லவா மதிதந்து நிதிதந்து மனதார அருள்தந்து மகிழ்வாக எனைப்பாரய்யா

நீர்சூழ்ந்த உலகோரை நிதம் காக்கும் என்ஈசா
நினையன்றி துணையாரய்யா ஏர்கொண்டு வாழ்கின்ற
எளியோரின் துயர்போக்க பொழிகின்ற மழையல்லவா

பெரியாண்டவர் அபிஷேகம் செய்ய தேவையான பொருட்கள்


பெரியாண்டவர் அபிஷேகம் செய்ய தேவையான பொருட்கள்



மஞ்சள் 50 கிராம்

குங்குமம் 50 கிராம் சந்தனம் 1 டப்பா

கற்பூரம் 25 கிராம்

கதம்பத்தூள் 50 கிராம் நல் லென்ணெய் 200 கிராம்

நெய் 100 கிராம்

அவல் பொறிகடலை 150 கிராம்

விபூதி [500 கிராம் ] சியக்காய் தூள்[1 பாக்கட்]

தேன் 50 கிராம்( 1பாட்டில்)

பன்னீர் (1 பாட்டில்)

ஊதுபத்தி பாக்கட் ஒன்று வெட்டிவேர் 5 ரூபாய்

திரிநூல் ஒன்று

தீப்பெட்டி ஒன்று

கலசநூல் உருண்டை இரண்டு

பிள்ளையார் துண்டு ஒன்று

தேங்காய் 2

இளநீர் 2 எலும்பிச்சை பழம் 3

பூமாலை 2

கதம்ப பூ

5

முழம்

வாழைப்பழம் 10 வாழை இலை (நுனி] 1

பச்சரிசி 1 கிலோ

வெல்லம் 1 கிலோ

பஞ்சாமிர்தம் 5 பழவகைகள்

வெற்றிலை பாக்கு 5 ரூபாய்

தயிர் 1/2 லிட்டர்

பால் 1 லிட்டர்

கொண்டை கடலை, அன்னதான பிரசாதம், வடை, "பாயாசம் வீட்டிலிருந்து தயார் செய்துகொண்டு வரவும்.

Thursday, August 12, 2021

பெரியாண்டவர் வரலாறு

வரலாறு ...
மனிதனாக வந்து மக்களை காக்கும் பெரியாண்டவர்:

பல்லவர்களால் புகழ்பெற்ற பல ஆலயங்கள் கொண்ட காஞ்சிபுரம் மாவட்டத்தில் சைவகுரவர்களால் பாடல் பெற்ற புகழ்மிக்க சிவதலமான திருக்கழுக்குன்றம். இதன் வடகிழக்கே 8 கிமீ தூரத்திலும், முருகன் அசுரர்களை எதிர்த்துப் போர் புரிந்த தலமான திருபோருரில் இருந்து மேற்கு திசையில் 12 கிமீ தூரத்திலும், செங்கல்பட்டில் இருந்து கிழக்கே 14 கிமீ தூரத்திலும், இயற்கை எழில் நிறைந்த, பசும்சோலைகள் சூழ்ந்த, வானாந்திர மரங்களாலும், மலைகலாலும் சூழப்பட்ட, திருநிலை கிராமத்தில் புள்ளினங்கள் இசைபாடும் குளம் மற்றும் ஏரி இருக்கரையின் மத்தியில் சுயம்பு லிங்கமாக தோன்றி சிவபெருமான் பெரியாண்டவர் என்ற நாமத்துடன் வீற்றிருந்து அருள்பாளிக்கின்றார்.
சிவபெருமானே மனிதவடிவம் தாங்கி உலகலாம் வலம் வந்து திருநிலையில் ஒருநிலையாய் தன்பாதத்தை பதித்து நின்று பெரியாண்டவர் என்ற நாமத்துடன் வீற்றிருந்து அருள்புரிகின்றார். இவ்வாலயத்தில் எம்பெருமானை சுற்றி 21 சிவகணங்கள் கைகூப்பி வணங்கி நிற்கும் காட்சி இவ்வாலயத்தை தவிர வேறு எங்கும் காணமுடியாத அரிய காட்சியாகும்.

முன் ஒரு காலத்தில் சுந்திரபத்திரன் என்ற அசுரன் சிவபெருமானை வணங்கி பல அரிய வரங்கள் பெற்றான் அவற்றுள் முக்கியமானது அவனது மரணம் சிவசக்தி சொரூபமானவரால் மட்டுமே நிகழ வேண்டும். மேலும் அதற்கு முன்னால் எம்பெருமான் மனித அவதாரம் எடுத்து முடித்திருந்தால் மட்டுமே அவனை கொல்ல முடியும் என்ற சிக்கலான வரம் பெற்று இருந்தான். இதனால் இந்திரன் முதலான தேவர்களை விரட்டியடித்து அவர்களின் ஆட்சியை கைப்பற்றி பலவகையில் தொல்லை கொடுத்து வந்தான். அசுரனின் தொல்லை பொருக்க முடியாமல் சிவபெருமானிடம் தேவர்கள் முறையிட்டு காக்குமாறு வேண்டினர். தேவர்களை காக்கும் பொருட்டும் அசுரர்களை அழிக்கும் எண்னத்துடன் சக்தியைக் காண எம்பெருமான் சென்றார்.

அசுரர்களின் அராஜகம் அதிகமாகி விட்டதால் அவர்களை உடனே அழித்து தேவர்களை காக்க வேண்டும், உடனே புறப்படு என்று கூறி நின்றார். ஜயன் கூறியதைக் கேளாமல் உமையவள் கண்மூடி தியானத்தில் ஆழ்ந்து அமைதி பூண்டு இருந்தார். தாயிடம் இருந்து பதில் வரததால் கோபம் கொண்ட எம்பெருமான் என்னுடைய சொல் கேட்டு பதில் கூறாமல் இருக்கும் நீ மீண்டும் மானிட பெண்ணாக பிறப்பாய் என கண்கள் கனல் கக்க எச்சரித்தார். இவ்வார்த்தை கேட்டு தியாணத்தில் இருந்து விழித்தெழுந்த பார்வதிதேவி ஜயனை நோக்கி எம்மை மானிடராக பிறக்க சொல்லும் நீவிர், எம்மில் பாதியாக விளங்குபவர் தானே ஆகவே நீரும் ஓரு நாழிகை மனிதனாக பிறக்க வேண்டும் என சாபமிட்டார். உமை அவதாரத்தின் ஆழமும், அர்த்தமும் புரிந்து பேசினாள். இவ்வார்த்தையைக் கேட்ட ஜயனின் சித்தம் மெல்ல கலங்கியது. ஈசன் தன்நிலை மறந்து மனித அவதாரம் கொண்டார். உலகமெல்லாம் திக்கு திசையின்றி அலைந்து திரிந்து வந்தார். பரமனின் இந்நிலை கண்டு உமையவள் அச்சமுற்றாள். உலக ஜீவராசிகள் பயத்தில் நடுங்கின. தேவர்கள் முதலனோர் தாயிடம் வணங்கி பரமனை காத்து அருளுமாறு வேண்டினர்.

உடனே தாய் தன் சூலாயுதத்தை வீசி எறிந்தாள் அது பிரகாசமாய் பூமியில் ஓர் இடத்தில் நிலையாய் நின்றது. சூலாயுதம் வீழ்ந்த இடத்தில் இருந்து இருபத்தி ஓர் மண் உருண்டைகள் சிதறி சுற்றி விழ்ந்தன. பின் அவை ஒவ்வொன்றும் சிவகணங்களாக மாறி சுற்றி ஜயனின் வருகைக்காக காத்து நின்றன. சூலாயுத ஒளியைக் கண்டு எம்பெருமான் திருநிலையாய் ஓர் இடத்தில் பாதம் பதித்து ஒருநிலையாய் நின்றார். பார்வதிதேவி அவ்விடத்திலேயே வணங்கி நின்றாள். ஒரு நாழிகை நேரமும் முடிய மனிதனாய் வந்தவர் சிவமாய் உறுமாறி தோன்றினார். மேலும் பெரிய மனிதனாக இவ்வுலகை வலம் வந்த ஆண்டவராகிய நீவிரே இன்று முதல் பெரியாண்டவர் என்று அழைக்கப்படுவீர் என உமையவள் கூறினாள். இவ்வார்தையை கேட்ட தேவர் முதலானோர் பெரியாண்டவா பெரியாண்டவா எனக் கூறி அழைத்து அவர் பாதத்தில் மலர் தூவி வாழ்த்தினர். சுற்றி நின்ற சிவகணங்களும் எம்பெருமான் நாமம் கூறி வணங்கி நின்றன.

ஒருநிலையில் திருநிலையாய் நிறுத்திய இவ்விடம் திருநிலை என அழைக்கப்படும் எனக் கூறிய ஜயன், மேலூம் உலகை காக்கும் நாயகி உமையவள் என்னை திருநிலையாய் நிலை கொண்டு ஆட்கொண்டதால் இன்று முதல் திருநிலைநாயகி எனஅழைக்கப்படுவாள் என்று வாழ்த்தினார். இவ்வார்த்தையைக் கேட்ட தேவர் முதலானோர் திருநிலை நாயகி என அழைத்து மகிழ்ந்து அவர் பொற்பாதத்தில் மலர் தூவி வாழ்த்தினர். சிவபெருமான் திருநிலையாய் ஒருநிலையில் தன்பாதம் பதித்து அருள்புரிந்த திருத்தலமே திருநிலையாகும்.

மேலும் பார்வதிதேவி தாயின் கருவின்றி பெரியமனிதனாக தோன்றி நிவீரே உலகை வலம் வந்தமையால் இவ்வுலகில் கருவின்றி வாடும் தம்பதியர்க்கு யார் இவ்விடத்தில் உன்நாமம் நினைக்கின்றார்களோ அவர்களுக்கு மழலைகளை வழங்கி அருள் புரியவேண்டும் என வேண்டினார். இறைவனும் அவ்வாறே நடைபெறும் என அருளினார்.இன்றும் இவ்வாலயத்தின் அருகில் உள்ள சித்தாமிர்த குளத்தில் நீறாடி இறைவனை நினைத்து மனம் உருகி நெய் திபம் ஏற்றினால் எந்த ஒரு தம்பதியும் குழந்தைபேறு பெருவார்கள் என்பது இறையன்பர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக விளங்குகிறது.

மேலும் ஆண்டவனின் பாதம் பதித்த இடத்தில் ஜோதி வெளிப்பட்டு சுயம்பு லிங்கம் அமைந்துள்ளது. சூலாயுதம் வீழ்ந்த இடத்தில் இருந்து 21 ஓர் மண் உருண்டைகள் சிதறி சுற்றி விழ்ந்து, பின் அவை ஒவ்வொன்றும் மண்ணில் இருந்து சிவகணங்களாக உருமாறி நின்றதை நினைவு கொள்ளும் விதமாக இவ்வாலயத்தில் 21 ஓர் மண் உருண்டைகள் சிவகணங்களாக செய்து வைத்து சுயம்பு லிங்கத்திற்கு அபிஷேகம் செய்வது போல் அவைகளுக்கும் செய்து ஆராதனை காட்டி அருள் பெருவது எங்கும் காணாத அதிசயம் ஆகும். நந்தி பகவானூம் மனிதவடிவில் தோன்றி சிவனைபோல் அருள்வது இங்கு காணலாம்.

நெடுங்காலத்திற்கு முன்பு ஒரு தம்பதியினர் குழந்தைபேறு இல்லாமல் மனவேதனையுடன் வாழ்ந்து வந்தனர். அவர்கள் சிவபெருமானை மனதில் நினைத்து மனமுருக வேண்டி துதித்து வந்தனர். ஒருநாள் சிவபெருமான் அவர்கள் கனவில் தோன்றி நான் பெரியாண்டவர் அவதாரக் கோலதில் உலகை வலம் வந்தபோது என்னை நிலைகொள்ள செய்த இடமான திருநிலைக்கு சென்று வேண்டினால் உங்களுக்கு மழலை செல்வம் கிட்டும் என்றும் மேலும் உங்களுக்கு வழிகாட்டியாக ஒரு பன்றி அழைத்து செல்லும் என்று கூறி மறைந்தார். அவர்களும் அங்கு எப்படி செல்வது என்று தெரியாமல் விழித்தபொது திடீர் என்று அங்கு ஒரு பன்றி தோன்றி அவர்களுக்கு வழி காட்ட அவர்களும் இறைவன் கூறியவாறே அதன் பின்னே சென்றனர். அது ஒரு இடத்தில் ஆடாமல் அசையாமல் திருநிலையாய் நின்று பின் திடிர் என காணமல் மறைந்து. இறைவனே தங்களுக்கு பன்றி உருவில் வந்து வழிகாட்டியதாக நினைத்து வழிபட்டபோது அந்த இடம் வெட்டவெளியில் ஒளிமயமாய் திகழ்ந்து ஜோதி தரிசனம் தந்தது. அதைக் கண்ட அவர்கள் பெரியாண்டவர் நாமத்தை மனமுருக சொல்லி வழிபட்டனர். ஒர் ஆண்டுகழித்து ஆண்குழந்தை பெற்றதாக கோயில் தல வரலாறு கூறுகின்றது.

திருநிலையில் ஒருநிலையாய் நின்று அற்புதங்கள் நிகழ்த்தி அன்பர்களை காத்திடும் இறைவனாக, நெஞ்சாரத் தம்மை பணிந்து வணங்குவோர்க்கு வேண்டும் வரம் வழங்கி, இந்த புவணத்தை காத்து ரட்சிக்கும் எம்பெருமானாக பெரியாண்டவர் விளங்குகிறார். இம்மை மறுமை எனும் பிறவிப் பெருந்துன்பம் போக்கி அடியாரை ஆட்கொள்ளும் நாயகனாக எம்பெருமான் காட்சிதருகின்றார். அவரின் அற்புதங்கள் கணக்கில் அடங்கா. மழலை இல்லா மங்கையரின் மனக்குறை களைந்து மழலைகளை உடன்வழங்கி, மனநலம் கண்டோர் வாழ்வில் நலவலம் வழங்கி, மணமாகதப் பெண்களுக்கு எளிதில் மணங்கூட்டி, ஏழை எளியோரின் வாழ்வை காத்து ரட்ச்சித்து, உழைத்து ஊர்காக்கும் உழவர்க்ளின் பயிர் வாழ மழைவளம் அளித்து, கொஞ்சித்தவழும் குழந்தைகளை அஞ்சாது காத்து, நாடிவரும் அடியார்கள் வாழ்வில் அஞ்ஞானம் நீக்கி மெய்ஞானம் வழங்கி மேன்மையான வாழ்வு தரும் இத்திருத்தலத்திற்கு வருகை தந்து பெரியாண்டவரின் பொற்பாதம் வணங்கி அவரின் திருவருளைப் பெற்று வையத்துள் வாழ்வாங்கு வாழ வேண்டுகின்றோம்.