Tuesday, June 29, 2021

Emergency 🦺 Helpline Number

List of 🦺 Emergency Helpline Numbers All Over in India

Helpline Number        -         Department

100 - Police 🚓🚨

101 - Fire 🚒🔥

102 - Ambulance 🚑

103 - Traffic Police 🚨🚓

104 - State level Helpline for Health        

108 -  Disaster Management/ Medical                     Helpline

112  - All in one Emergency Number

(General Emergency Department of Telecommunications (DoT))

131 - Indian Railway  General Enquiry 🚂

139 - Railway Enquiry 🚂🚃

181 - Domestic abuse and sexual violence- Women's Helpline

197 - Directory enquiry service

198 - Telephone Complaint Booking

1031 - Anti Corruption Helpline

1033 - Emergency Relief Centre on National Highways

1066 - Anti-poison

1071 - Air Accident

1072 - Train accident 🚂🚃

1073 - Road Accident  🛣️/ Traffic Help Line ⛔🚦

1090 - Anti terror Helpline/Alert All India

1091 - Women Helpline in Distress

1092 - Earth-quake Help line service

1096 - Natural Disaster Control Room

1097 - AIDS Helpline

1098 - Child Abuse Hotline

1099 - Central Accident and Trauma Services

1551 - Kisan Call Center

1906 - LPG emergency helpline number

1910 - Blood Bank Information

1919 - Eye Donation/ Eye bank information service

1947 - Aadhar Card-UIDAI (Unique Idenditification authority of India), 1800-180-1947)

1950 - Election Commission of India

1800-11-4000 -  National Consumer Helpline

Monday, June 28, 2021

தியானம் 🌍முறைகள்🧘‍♂️🕊️🧘





             தியானம் முறைகள்


தியானம் : 
                        தியானம் செய்யச் செய்ய மனம் அமைதி அடையும் மனம் அமைதி அடைந்தால் சிந்திக்கும் திறமை வளரும். அந்தத் திறமை வந்தால் பொறுமை வளரும். அந்தப் பொறுமை வளர்ந்தால் பக்குவம் வரும். அந்தப் பக்குவம் வந்து விட்டால் நாட்டில் ஒற்றுமை உணர்ச்சி ஏற்படும். மன நிம்மதியை ஆன்மிகத் துறையில் ஈடுபடுவதால் மட்டுமே பெற முடியும். அதற்குத் தியானம் தேவை. அந்தத் தியானத்திற்குச் சிறந்த இடம் இது (மேல்மருவத்தூர்)                                                                   கிரகணத்தின்_போது_தியானம் :                                                                        கிரகணத்தின் போது நீங்கள் தியானத்தில் அமர்ந்தால் பல ஆக்கவிளைவு, பக்தி உணர்வு, மந்த புத்தி நீங்குதல் ஆகிய பலன்கள் உண்டாகும். அமாவாசை, பெளர்ணமி நாட்களில் தம் இல்லங்களிலோ, மன்றங்களிலோ 5 நிமிடம் மெளனத்தைக் கடைப்பிடித்தால் அதற்கான பலனைத் தருவேன்.       
                                            மேல்மருவத்தாரில்_தியானம்_செய்தால் :                                         இந்த மண்ணில் 108 முறை அமர்து தியானம் செய்தவர்களையும் ஒன்பது முறை இங்கே இருமுடி செலுத்தியவர்களையும் ஏவல், பில்லி, சூனியங்கள் தாக்காது.

 தியானமும்_மெளனமும் :
         எப்போதெல்லாம் உன் மனம் குழம்புகிறதோ எப்போதெல்லாம் உனக்கு எதிர்ப்புகள் வருகிறதோ அப்போதெல்லாம் ஒரு பத்து நிமிடம் மெளனமும் தியானமும் மேற்கொள்.
 மனத்தையும்_காமத்தையும் கட்டுப்படுத்த:
        “வாடுகிற நேரத்தில் வாடியும், பாடுகிற நேரத்தில் பாடியும், அழுகிற நேரத்தில் அழுதும், உங்களிடத்தில் ஆன்மிகத்தை வளர்த்து வருகிறேன். வெளிவேடம் தேவையில்லை. மனத்தையும், காமத்தையும் கட்டுப்படுத்தத் தான் தியானப் பயிற்சி அளிக்கிறேன்.

 தியான_முறை : அறுகோணம் போல் கால்களை வைத்துக் கொண்டு சின்முத்திரையுடன் தியானம் செய்ய வேண்டும். உன்னை நீயே புரிந்து கொள்ள வேண்டும். 

See you tube link 🔗

உன் ஆன்மாவையும் புரிந்து கொள்ள வேண்டும். அமர்ந்து கொண்ட பிறகு எந்தக் குறிப்பிட்ட மந்திரத்தையும் நீ கூற வேண்டாம். மனைவி, மக்கள், ஊர், உலகம் என்று உன் மனம் எங்கெங்கே சுற்றி அலைகிறதோ அதன் போக்கில் விட்டுவிடு. எந்தக் கட்டுப்பாட்டையும் விதிக்க வேண்டாம். நேரம் செல்லச் செல்ல இந்த எண்ண ஓட்டங்கள் அடங்கி ஒருமுகப்படுதலை நீ உணர முடியும். நாளாவட்டத்தில் நீ வேறு, உன் மனமும் பொறிபுலன்களும் வேறு என்பதை எளிதில் உணர முடியும். ஆடு மாடு மேய்ப்பவர்களை நீ கண்டதில்லையா? அவன் என்ன செய்கிறான்? ஒவ்வொரு மாட்டின் பின்னேயுமா செல்கிறான். மாடுகள் தம் விருப்பம்போல் சுற்றிப் புல்தரையில் மேய்ந்து கொண்டிருக்கின்றன. ஓரிரு முறைகள் தன் இருப்பிடத்திலிருந்தபடியே மாடு மேய்ப்பவன் மாடுகள் புல் மேய்வதைப் பார்த்துக் கொள்கிறான். அதே போல் நீயும் இருத்தல் வேண்டும். உன் பொறிபுலன்கள் மனத்தின் நிலையில் நின்று, அதனுடன் தொடர்பற்ற முறையில் நின்று, மனம் நினைப்பதை வேடிக்கையாகப் பார்த்துக் கொண்டிருக்கப் பழகுவாயாக. நாளாவட்டத்தில் உன் ஆன்மா மனக்கோட்டத்தில் ஈடுபடாமல் மனம், பொறி, புலன்கள் இவற்றின் செயல்களைப் புறநிலையாகத் தனித்து நின்று காணும் இயல்பைப் பழகிக் கொள்ளும் என்று திருவாய் மலர்ந்தால் மருவத்தூர்ப் பெருமாட்டி. தியானத்தின் போது நீங்கள் சிறுவயதில் செய்த தவறுகள், துரோகங்கள் உங்கள் முன் வருகின்றன. அவற்றை அப்படியே விடு! பின்னால் அந்த எண்ணங்கள் மாறும்! தியானத்தின் போது உன் மனம் எங்கெங்கோ ஓடும். தளர வேண்டாம். முதலில் உன் மனதை ஓட விடு, அது முதலில் குதிரை போலவும், மான் போலவும் ஓடும். பிறகு அது ஒரு நிலைக்கு வந்து சேரும்.
 
அடிகளார் – சுயம்பு_அன்னை : அடிகளார், சுயம்பு, ஆதிபராசக்தி இம்மூன்றையும் நினைத்து ஒரு முகத்தோடு தியானம் செய்! உன் வாழ்வில் உயர்வு எப்படி உள்ளது என்பதைப் பிறகு பார்! (குறிப்பு : வீட்டில் தியானம் செய்யும் போது தரையில் செவ்வாடை விரிக்கவும்) தியானம் என்பது நிதானம்; நிதானம் என்பது தானம். தானம் என்பது வருவாய். ஆன்மிகத்தில் உன் ஈடுபாடு வேண்டும். 10 நிமிடம் தியானத்துக்கு ஒதுக்கிப்பார்! சினிமா மோகத்தை விடு! பெண்டுலம் போல உன் உள்ளம் ஆடிக் கொண்டிருக்கிறது! பணமா, பாசமா? குலமா, குணமா? அருளா, பொருளா? ஆன்மிகமா, விஞ்ஞானமா? என்றெல்லாம் ஆடிக் கொண்டிருக்கிறது. நீங்கள் ஆன்மிகத்தில் ஈடுபட்டு ஆடினால் அந்த பெண்டுலகம் சீராக ஓடும். ஐம்புலன்களையும் அடக்கி மனத்தை ஒன்றுபடுத்து. ஆசா பாசங்களை அடக்கி அம்மாவை நினைத்துத் தியானம் செய்! ஆத்மசக்தி எரியத் தொடங்கும். 

தியானம்_பண்ணு : 
     கடன் தொல்லை, பிள்ளைகளால் தொல்லை, கஷ்டம் என்ற நெருப்பு எல்லாம் உண்டு. ஒவ்வொருவர்க்கும் உண்டு. எல்லாவற்றையும் விட்டு தியானம் பண்ணு! உணர்வோடு தியானத்தில் உட்கார். தியானத்தினால் சில பேர் இங்குக் கரை சேர்ந்திருக்கிறார்கள். அவற்றையெல்லாம் வெளியில் சொல்வதில்லை. 
ஆன்மாவைச்_சிதற_விடாதே ! “ஆன்மாவை சிதறவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அமைதியாக இருப்பதுதான் ஆன்மாவின் இயல்பான நிலை! கோபப்படும் போதும், புலன்கள் கட்டுக்கடங்காமல் திரியும் போதும், ஆன்மா சிதறுகிறது. அந்த ஆன்ம_சக்தியைத்_திரட்டிக்_குவிக்கவே_தியானம்_செய்கிறோம். வயிற்றுப் பசிக்குச் சாப்பிடுவது போல் ஆன்மா குளிரவும், குவியவும் தியானம் செய்ய வேண்டும். ஆன்மா சுத்தப்பட, ஆன்ம சக்தி குவியக் குவிய ஆன்மாவே_வாழ்வில்_நல்வழி_காட்டும்! நல்லது கெட்டதைத் தெரிய வைக்கும், புலன்கள் கட்டுப்பாட்டிற்குள் வரும்.
  மேல்மருவத்தூருக்கு_வரும்_போது : 
   மாதத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை இங்கே வந்து செல்வது உனக்கு நல்லது. ஏதோ வந்தோம் போனோம் என்று இருக்க கூடாது. எனக்கு அர்ச்சனை செய்துவிட்டால் மட்டும் போதாது. இங்கே வரும்போதெல்லாம் இரண்டு அல்லது மூன்று நிமிட நேரம் தியானம் செய்து விட்டுச் செல்! தியானம்னா வேற ஒண்ணுமில்லை, வியாழக்கிழமைலேன்னு வெச்சுக்கோயேன். குறிப்பிட்ட சாயங்காலம்னு வச்சுக்கோயேன்…. எவ்வளவு ஈஸியா முடியுமோ அவ்வளவு ஈஸியா….. ஈஸிசேர்ல வேணும்னாலும் ஒக்காந்துக்கோ, வானத்தைப் பார்த்து ஒக்காந்துக்கோ உன் கடந்த காலத்தை நெனச்சி பார்த்துக்கிட்டே வானத்தைப் பார்த்து ஒக்காந்துக்கோ… தொடர்ந்து செய், அதுதான் பயிற்சி… இப்படியே பயிற்சி பண்ணு இது எங்க கொண்டு போய் விடுதுன்னு பாரு… அதுதான் தியானம் ரொம்ப சிம்பிள்.

 தியானம்_கஷ்டமாக_இருப்பது_ஏன் : 
தியானம் செய்யும் போது மனம் ஒருமுகப்பட வேண்டும். அவ்வாறு முடிவதில்லை கஷ்டமாக இருக்கிறது என்கிறார்கள். உங்கள் மனத்தை ஒரு முகப்படுத்தி தியானம் செய்யும் போது அம்மா அதற்குக் கட்டுப்பட்டு பதில் சொல்ல வேண்டி வரும். அது கருதியே அம்மா உங்களை தியானத்தில் இருக்க விடாது. அதற்காக நீங்கள் தளர்ந்து போகக் கூடாது. விடா முயறிசியாக அம்மாவைப் பிடிக்க வேண்டும்.
 பெண்களுக்குத்_தியானம் : பெண்கள் பகல் 12.00 மணிக்குத் தியானம் செய்ய வேண்டும். மனக்கட்டுப்பாடுடன் தியானம் செய்ய வேண்டும். இரவு வேளையிலும் வீட்டில் தியானம் பழகலாம். ஆனால் உங்களால் அது முடியாது. மாத விலக்காக இருந்தாலுங் கூட 10 அல்லது 15 நிமிடம் தியானம் செய்யலாம்.
  தியானப்_பயிற்சி_சில_நுணுக்கங்கள் : 
தியானம் இருக்கும் போது இடுப்பு வலி, விலா வலி, முதுகு வலி, கழுத்து வலி முதலியன ஏற்படும். படிப்படியாக 10, 20, 30, 40 நிமிடம் என்று நேரத்தைக் கூட்டிக் கொண்டே வரவேண்டும். அதன்பின் சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். இந்தத் தடைகளையெல்லாம் கடந்துதான் நீங்கள் முன்னேறி வரவேண்டும். பிறகு கட்டுப்பாட்டுடன் 40 நிமிடங்களிலிருந்து மூன்று மணி நேரம் வரை பொறுமையாகத் தியானம் செய்தால் நீங்கள் கால்பங்கு ஆன்மிக முன்னேற்றம் அடையலாம். தியானத்தில் அமர்ந்த சிலருக்கு மறுபிறவி இல்லை. தியானம் மன அழுக்கைப் போக்க பயன்படும். மனக்கட்டுப்பாட்டுடன் வழிபாடு செய்வதால் அகம் தூய்மை அடைகிறது. அகத்தூய்மையால் நல்ல உணர்வும், பயபக்தியும் ஏற்படும். 

குறிப்பு :- 
  தியானத்தின் மூலம் வெளியேறும் தூய எண்ண அலைகள் நம்மைச் சுற்றிச் சஞ்சாரம் செய்யும் பொழுது கண்ணுக்குத் தெரியாமல் உலவிக் கொண்டிருக்கும் தீயசக்திகள் அப்புறப்படுத்தப்படுகின்றன. மனிதர்களிடம் மறைந்துள்ள தீய எண்ணங்கள் முடுக்கி விடப்படுவதற்கு தீய ஆவிகளும் ஒரு காரணம். கூட்டு தியானத்திற்கு மேலும் சக்தி அதிகம்.

அன்னையின் தினமும் ஒரு அருள் வாக்கு💠

💠அன்னையின் தினமும் ஒரு  அருள்              வாக்கு💠




🧘தியானம் தேவை:🧘‍♂️

"தியானம் தேவை🧘‍♀️. இல்லறத்தில் ஈடுபட்டிருந்தாலும் தியானம்🧘‍♂️, மௌனம்😶, அர்ச்சனை, அபிடேகம் ஆகியவை தேவை. ஆன்மிகத்தில் அமைதி தேவை🧘."


🙏-> மேல்மருவத்தூர் அன்னையின் அருள் வாக்கு🌼🙏

Telegram

Friday, June 25, 2021

ஓம் என்ற ஓலியின் விஞ்ஞான இரகசியம்

"ஓம் என்ற ஓலியின் விஞ்ஞான இரகசியம்"

ஓம் என்ற ஒலி முறையான அதிர்வுடன் உச்சரிக்கப்பட்டால் மட்டுமே பலன் கொடுக்கும் எனவே அவரவர்கள் தங்கள் சுயபரிசோதனை மூலமோ அல்லது குருவிடமோ கேட்டு அறிந்து கொள்ள வேண்டும் 

ஓங்கார ஒலி பிரபஞ்சத்தின் மூல சப்தம் அது அண்டத்திலும் உள்ளது பிண்டத்திலும் உள்ளது மேலும் பல மந்திர ஒலிகளும் இது போல விண்வெளியில் பரவியுள்ளது என்றும் அதை யோக சாதனை செய்வதன் மூலமே கேட்க முடியும் என்று சித்தர்களின் பாடல்கள் தெரிவிக்கிறது நாம் வாயால் உச்சரிக்கும் ஒலிகள் எப்படி இருக்கிறது என்றால் சினிமா பாடகி ஜானகியின் குரல் இனிமையாக இருக்கிறது என்று சொல்வதற்கும் தேன் இனிப்பாக உள்ளது சொல்வதற்கும் எவ்வாறு ஒற்றுமையும் வேற்றுமையும் உள்ளதோ அது போலவே வெளியில் ஒலிக்க கூடிய மந்திரங்களும் இருக்கிறது 

வேதங்கள் கூறுவது என்னவெனில் ஓம் என்ற ஒலியிலிருந்தே பிரபஞ்சம் உண்டாகி விரிவடைந்து கொண்டு செல்கிறது அது ஒவ்வொரு அணுவிலும் சக்தியாக இருக்கிறது என்று சொல்லப்பட்டுள்ளது 

அந்த ஒலியை உணர வேண்டுமெனில் மனிதன் தன் ஐம் புலன்களை கடந்த நிலைக்கு செல்ல வேண்டும் அது யோக சாதனைகளால் மட்டுமே முடியும் ஏனெனில் அதற்கான விஞ்ஞான விளக்கத்தை பார்ப்போம்
மனிதன் தன் காதுகளால் உணர கூடிய ஒலி அலைகளின் எல்லையை விஞ்ஞானம் ஏற்கனவே கண்டறிந்துள்ளது அதாவது 20 Hz என்பது ஒரு துகள் ஒரு நொடிக்கு இருபது முறை அதிர்வதால் உண்டாகும் ஒலியின் நிலையாகும் இவ்வாறு ஒரு நொடிக்கு 20 Hz முதல் 20,000 Hz வரை அதிரக்கூடிய துகளின் ஒலி அலைகளை மட்டுமே மனித காதுகளால் கேட்க முடியும் விலங்குகள் மற்றும் பறவைகள் இதில் விதிவிலக்காக இருக்கிறது அது பிரபஞ்சம் ஐந்தறிவு ஜீவன்களுக்கு கொடுத்த வரப்பிரசாதமாகவே கருதலாம் ஏனேன்றால் அந்த ஓங்கார ஒலியை கேட்டு உணர கூடிய உயிரணங்களே தன்னிலிருந்து இன்னொரு நிலைக்கு பரிமாற்றம் அடைய முடியும்

விலங்குகளும் பறவைகளும் நம்மை போல் தியானம் யோகபயிற்சியெல்லாம் செய்ய முடியாது இயற்கை சீற்றம் பூகம்பம் போன்றவை வருவதற்கு முன்பே அதை உணர்ந்து கொண்டு அதன் உயிரை காப்பாற்றி கொள்வதற்காக இயற்கை கொடுத்த வரமாகவே கருதலாம் அதனால்தான் பூகம்பம் வருவதற்கு முன்பே சுற்று புற ஒலி அலைகளில் மாற்றம் ஏற்படுவதை உணர்ந்து பறவைகள் சிதறி பறந்தோடுகிறது நாய்கள் குரைக்கிறது மாடுகள் மற்றும் பல விலங்குகள் மிரண்டு ஓடுகின்றன மழை வரும் முன்பே தும்பி என்ற தட்டான் பூச்சி கூட்டமாக பறக்கிறது தவளைகள் கத்துகின்றன மனித இனம் மட்டும் இந்த விஷயத்தில் செவிடாகவே உள்ளது ஏனென்றால் 20 Hz கீழே உள்ள ஒலி அலைகளை உணர முடிவதில்லை ஏனென்றால் விண்ணிலிருந்து வரக்கூடிய ஒலி மற்றும் பூமியின் காந்த விசை ஒலி பூமி சுழலும் ஒலி ஆகியவை ஒன்றுக்குள் ஒன்று மோதி கலந்து மீண்டும் பூமியின் தரையில் மோதும்போது அதன் ஒலி அளவு ஏறக்குறைய 7.83Hz என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள் இது 20 Hz க்கும் கீழே உள்ளதால் நாம் கேட்க முடியாது ஆனால் ஐம்புலன்களை கடந்த யோகிகளின் காதுகளில் அது ஒலிக்கும் அதையே நாதபிரம்ம ஒலி என் கூறுகிறார்கள் பிரபஞ்சம் மனிதனுக்கு விதித்த வரையறை எல்லைகளை யோகிகள் கடந்து விடுவதால் அவர்களால் உணர முடியாத விஷயம் என்று எதுவும் இல்லை செய்ய முடியாத காரியம் என்று எதுவும் இல்லை காற்றிலே பறக்கவும் நீரிலே நடக்கவும் அரூப நிலையை அடையவும் தொலைவில் நடக்கும் விஷயங்களை காணவும் உணரவும் வல்லவர்கள் ஆகிறார்கள் நீங்கள் மனதுக்குள் பேசும் ஒலி அலைகளும் அவர்களுக்கு கேட்கும் இங்கிருந்தபடி அண்டசராசரங்களில் ஏற்படும் மாற்றங்களை காண முடியும் ஒரு நொடியில் ஒளிவேகத்தையும் மிஞ்சிய நிலையில் பிரபஞ்சங்களை கடந்து செல்ல முடியும் இந்த உடலுக்கு விதிக்கப்பட்ட நிலைகளை கடந்த நிலைகளையே அஷ்டமா சித்திகள் எனப்படுகிறது அந்த நிலையை அடைந்த மனிதர்கள் சித்தராகிறார்கள்

இந்த 20 Hz லிருந்து 20,000 Hz என்ற ஒலி அலைகளுக்கு அப்பாற்பட்ட நிலைகளில்தான் தேவ ரகசியங்கள் ஒளிந்துள்ளது அந்த நிலைகளில் இருப்பவர்கள்தான் சித்தர்கள் ரிஷிகள் ஞானிகள்

இந்த ஓம் என்ற ஒலி தொடர்ந்து குறிப்பிட்ட அலைவரிசையில் உச்சரிக்கபடும்பொழுது ஒரு வாயு இந்த உடலுக்குள் உருவாகி நாடி நரம்பு இரத்தம் DNA மற்றும் அனைத்து கோடிக்கணக்கான உயிரணுவிலும் பரவுவதாக விஞ்ஞானம் கண்டாறிந்துள்ளது அந்த வாயுவின் பெயர் NITRIC AXOID

இந்த Nitric axoid பற்றி விரிவாக அறிந்து கொண்டாள் சித்தரகசியங்களும் பிரபஞ்ச ரகசியங்களும் புரியும் எனவே அதுபற்றி விளக்கமாக பார்ப்போம்

சித்தர்களும் ஞானிகளும் கூறியபடி இதயத்தின் துடிப்பாலும் இரத்த ஓட்டத்தாலும் நாடி நரம்புகளில் பிராணஓட்டம் ஓடுவதாலும் ஸோ ஹம் என்ற உள்சுவாசம் வெளி சுவாசத்தாலும் நாத விந்து கலப்பால் உண்டாகும் ஒளியாலும் ஓங்காரம் ஒலிப்பதாக பலவாறாக கூறியுள்ளார்கள் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் அண்டத்தில் உள்ளது எதுவோ அது பிண்டத்திலும் உள்ளது என வெளிப்படையாக சொல்லி வைத்தார்கள் ஆனால் அதில் பல அர்த்தங்கள் உள்ளது 

இந்த Nitric oxoid நைட்ரிக் ஆக்சைடு என்ற வாயு என்பது ஓம்ம்ம்ம்ம்ம்ம் என்றி இழுக்க படும்போது உண்டாகிறது என விஞ்ஞானிகளால் கண்டறியப்பட்டுள்ளது அதாவது ம்ம்ம்ம்ம்ம்ம் என்ற அநுஸ்வாரம் முக்கியமான பங்காற்றுகிறது ஓ என்பது ம் என்ற சப்தத்தை அழுத்தமாக ஒலிப்பதற்கு உந்து விசையாக Audio amplify போல செயல்படுவதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள் அப்பொழுதான் ம்ம்ம் என்ற அநுஸ்வரம் நீண்ட தொலைவுக்கு பயணப்படும் ஆ ஊ ஓ என்ற எழுத்துக்கள் மட்டுமே நீண்ட தொலைவுகளுக்கு ஒலி அலைகளை கடத்தக்கூடியது அல்லது உந்தி தள்ளி கூடியது 

இன்று விஞ்ஞானிகள் கண்டறிந்த விஷயத்தை 7000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சித்தர்கள் தங்கள் ஒலைசுவடிகளில் எழுதி ஆவணபடுத்தியுள்ளார்கள் 
ஓம் என்ற ஒலி நம் உள் சுவாத்தின் போது அதிகமாக ஆக்ஸிஜன் மற்றும் பிராண சக்தி உள்ளிழுக்கப்பட்டு இரத்த மண்டலத்தில் கலந்து உடலின் உள்ளுறுப்புகளான இதயம் நுரையீரல் கல்லீரல் சிறுநீரகம் இனவிருத்தி சுரப்பிகள் நாடி நரம்புகள் மற்றும் பல ஹார்மோன்கள் ஆகியவற்றில் பாய்வதோடு நில்லாமல் சூட்சும உடலாகிய பிராண உடலிலும் சென்று நிறைகிறது இதுவே வாசியோகம் சிவயோகம் இராஜயோகம் குண்டலினி யோகம் என்று பலவாறாக சொல்கிறோம் 

வேத கால ரிஷிகள் சித்தர்கள் உடலளவிலும் மனதளவிலும் சக்தி படைத்தவர்களாக இருந்துள்ளார்கள் மேலும் அவர்களுடைய பீனியல் பிட்யூட்டரி போன்ற சுரப்பிகள் பெரிய பாதாம் பருப்பு அளவுக்கு பெரியதாகவும் அல்லது சிறிய எலுமிச்சம் பழ அளவும் மற்றும் பெருநெல்லி அளவும் இருந்திருக்கலாம் என்றும் ஓலை சுவடிகளை ஆராய்ந்த விஞ்ஞானிகள் கூறுகிறார்கள் ஏனென்றால் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதர்கள் மிக பெரிய உருவங்களையும் (Gigantic size) மற்றும் பெரிய தலைப்பகுதியும் கொண்டிருந்தார்கள் எனவும் ஆவணங்கள் கூறுவதாக கண்டறியப்பட்டுள்ளது 

மேலும் அவர்கள் உடலில் 12 இழை கொண்ட DNA சமாச்சாரம் முழு அளவில் செயல்பாட்டில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது சந்தேகம் உள்ளவர் 12 strand Nill junk Dna என்று கூகுளில் அப்புறமா தேடிப்பார்க்கவும் 

தற்போது உள்ள மனித இனத்திற்கு இரண்டு இழை கொண்ட DNA மட்டுமே செயல்பாட்டில் உள்ளது அதாவது இரண்டு இழை கொண்ட ஒரு ஜோடி Dna என்று கவனத்தில் கொள்ளவும் மீதி உள்ள 10 இழை கொண்ட 5 ஜோடி Dna குப்பையாக உள்ளது அதில் உள்ள தகவல்களை கண்டறிய முடியவில்லை என விஞ்ஞானிகள் கூறுகிறார்கள் அந்த 5 ஜோடி Dna பயன்பாட்டில் இல்லாததால் விஞ்ஞான உலகம் அதை கணக்கில் எடுத்து கொள்ளவில்லை எனவே மருத்துவ ஆவணங்கள் ஒரு ஜோடி Dna வில் உள்ள தகவல்களை மட்டுமே கூறி வந்ததால் நாமும் ஒரு ஜோடி Dna மட்டும்தான் நமக்கு உள்ளது என நம்பி கொண்டிருக்கிறோம்

யோகிகளும் ரிஷிகளும் இந்த ஆறு ஜோடி (12 இழை) Dna க்களை activation செய்து ஐம்புலன்களை வென்று மனித உடலுக்கு விதிக்கப்பட்ட எல்லைகளை கடந்து விடுகிறார்கள் இந்த ஆறு ஜோடி Dna வின் சக்தி என்பது சுழுமுனையில் ஒருங்கினைந்து பீனியல் சுரப்பியில் வெளிப்படும்போது ஆறுமுக கடவுளாக வெளிப்படுகிறது யந்திர தகடுகளில் வரையப்படும் ஆறு முக முக்கோணம் இந்த Dna வைதான் குறிக்கிறது ஆறுமுகனுக்கு 12 கரங்கள் இடகலை பிங்கலை என்ற இரண்டு மனைவி மேலும அவர் கையில் முதுகு தண்டை குறிக்கும் வேல் மயில் வாகனம் குறிப்பாக மயில் வாகனம் ஏன் வைத்தார்கள் ? மயிலின் கழுத்தின் உள்ள நிறமும் Dna வில் வெளிப்படும் ஒளியும் ஒரே மாதிரி உள்ளதாக விஞ்ஞானிகள் குறிப்பிடுகிறார்கள் அதாவது Dna என்பது Ultr violet photon என்ற ஒளியை வெளிப்படுத்துவதாக கூறுகிறார்கள் இது பற்றி அப்புறம் விளக்கமாக பார்ப்போம் இப்போ Nitric Oxide விஷயத்துக்கு வருவோம் இந்த வாயுவானது ஒரு செல் உயிரிகளின் தோற்றத்திற்கு அடிப்படையானது என்றும் மனித இனம் இவற்றிலிருந்தே புல்லாகி பூண்டாகி புழுவாகி மரமாகி பல்மிருகமாகி பாம்பாய் பறவையாய் தன் பரிணாம மாற்றத்தை அடைந்து மனித இனம் என்ற நிலையை அடைந்துள்ளது என விஞ்ஞானமும் கூறுகிறது சித்தர்களும் மறைபொருளாக கூறுகிறார்கள்

ஓம்ம்ம்ம் என்ற ஒலியை உள்முகமாக கேட்டு தியானம் செய்து வரும்போது Nitric Oxide உற்பத்தியாகி நாடி நரம்பு இரத்தம் ஆகியவற்றில் கலக்கிறது இதனால் உடலுக்குள் ஏற்படும் மாற்றங்கள் அமிர்தமாக சுரக்கிறது அதுவே பேரானந்தம் நித்யானந்தம் சச்சிதானந்தம் பேரின்பம் என்று அழைக்கப்படுகிறது அமிர்தம் என்பது சுத்திகரிக்கப்ட்ட கபம் என்று ஒரு வாசியோக நூல் கூறுகிறது அதனுடன் பல ஹார்மோன்கள் சுரக்கும் திரவங்கள் கலந்த சுவையே பஞ்சாமிர்தம் என பல யோகிகளும் ஞானிகளும் கூறியுள்ளார்கள் அந்த கலவையில் ஒன்றுதான் இந்த Nitric oxide மேலும் தற்போதைய விஞ்ஞானத்தில் இந்த Nitric oxide வாயுவை சிரிப்பூட்டும் வாயு Lougfing gass என கூறுகிறார்கள் அதாவது இந்த வாயுவை ஒருவர் முகத்தில் Spray செய்தால் அவர் சிரித்து கொண்டே மகிழ்ச்சியில் ஆனந்தத்தில் இருப்பார் அப்படிப்பட்ட வாயு உள்முகமாக கிடைக்கும்போது அதை அனுபவித்தவரின் நிலையையே பேரானந்தம் என கூறப்படுகிறது இப்ப பல உண்மைகள் உங்களுக்கு புரிந்திருக்கும் என நம்புகிறேன் 

மேலும் இந்த Nitric Oxide செய்ய கூடிய நற்பலன்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளது அவற்றை பார்ப்போம்

இந்த வாயுவானது நம் உடலில் உள்ள 50 டிரில்லியன் உயிரணுக்கள் தங்களுக்கு இடையேயான தகவல்களை பரிமாறிக்கொள்ள உதவுகிறது

நரம்பு மண்டலம் மூளை மற்றும் ஹார்மோன்கள் அவற்றின் Dna அணுக்கள் தங்களுக்கு இடப்பட்ட கட்டளைகளையும் தங்களுக்குள் இருக்கும் நினைவுதிறன்களும் அழிந்து போகாமல் இருக்க பாதுகாக்கிறது

நோய் எதிர்ப்பு சக்தியாகிய Immune system மேம்படுத்தபடுகிறது பாக்டீரியா மற்றும் நோய் தொற்று கிருமிகளிடம் போரிடுகிறது Brain tumer என்ற மாளை கட்டி வராமல் காக்கிறது 

இரத்த அழுத்தத்தை பராமரிக்கவும் மூட்டு எலும்பு தேய்மானம் ஏற்படுவதையும் தடுக்கிறது 

தசை மண்டலத்தில் வீக்கம் ஏற்படுவதை தடுக்கிறது

ஆழ்ந்த உறக்கத்தை கொடுக்கிறது ஐம்புலன்களின் செயல்பாடுகள் துல்லியமாக இருப்பதை உறுதி செய்கிறது

உடலுக்கு சக்தியையும் வலிமையும் ஆரோக்கியத்தையும் கொடுக்கிறது இந்த உடலே காயகற்பமாக மாறுகிறது சித்தர்கள் கண்ட ரகசியம்.   
தேவநாகரி எழுத்தில் பயன்படுத்தப்படும் ஓம் குறியீடு
“ ஓம் ஒலி கேட்டுணர்ந்தால் உள்ளொலி ஞானம் தோன்றும்,
ஓம் ஒலி கண்டுணர்ந்தால் ஒளியொளிர் உருவே தோன்றும்,
ஒளியொளிர் உருவந்தானே ஆடலன் ஆடலன்றோ

— (மய விஞ்ஞானம் )
 **ஓம்காரம் எனும் ஆதி முதல் தெய்வமான இறை மகா பரஞ்சோதி மருவத்தூரில் மனித வடிவு கொண்டு அவதாரம்.
 

ஓம் பொன்னுலக மாளும் எம் மருவூர் வேந்தனே உன் பொன்னடி போற்றி போற்றி..



Wednesday, June 16, 2021

வேண்டுதற் கூறு மந்திரமும் விளக்கமும்


11 குன்றாத மறைந்த கொழுந்தே வருக! கோகிலமே வருக!

கொண்டுனை எண்டிசை கண்டுணர் கின்றவர் குறையறவே வருக!

மன்ற மணந்த முறையே வருக! மருவரசி வருக!

மண்ணினில் நின்றவர் கண்டவர் விண்டிலர் மனமிரங்கி வருக!

கன்று மறைந்த கனியே வருக! கலையே வருகவே!

கண்களை உண்டிட விண்டலம் நின்றிட கார்முகிலாய் வருக!

நின்று மலர்ந்த நினைவே வருக! நித்திலமே வருக!

நெஞ்ச மலர்ந்தவர் கொஞ்சி மகிழ்ந்திடும் நிறையறிவே வருகவே!

ஓம் சக்தி
ஓம் சக்தி
ஓம் சக்தி
ஓம்
ஓம்
ஓம்

வேண்டுதற் கூறு



சக்தி வழிபாடு

மழை வேண்டல்

108 திருவடி போற்றி