----------------------------------------------------------
🌺🔱🌼மூலமந்திரம்🌺🔱🌼
💠ஓம் சக்தியே! பராசக்தியே!
💠ஓம் சக்தியே! ஆதிபராசக்தியே!
💠ஓம் சக்தியே! மருவூர் அரசியே!
💠ஓம் சக்தியே! ஓம் விநாயகா!
💠ஓம் சக்தியே! ஓம் காமாட்சியே!
💠ஓம் சக்தியே! ஓம் பங்காரு காமாட்சியே!
🕉️1. மாதாவாக இம் மண்ணில்
மருவூர் இறங்கி வந்தவளே! தாதா எனவே பணிகேட்டுத்
தரணியை நானும் ஒளிசெய்வேன்!
காதும்காதும் வைத்தாற்போல்
கனிவுடன் நயந்து கேட்டிடுவேன்!
போதும்போதும் எனும்படிக்கே
பொன்மழை எனக்கே பொழிவாயே!
🕉️2. ஏதோசொன்னான் இவன் சொன்னான்
என்னும் வார்த்தை அல்ல இவை! தீதோ நன்றோ நானறியேன்! தெய்வமே பொன்மழை பொழிவாயே!
வாதுகள் வழக்குகள் வம்புகளாய்
வாடித் தனியே தவிக்கின்றேன்!
பேதைவறுமை தனைநீக்கிப் பெய்க பொன்மழை நீதாயே!
🕉️3. எட்டுத்திக்கும் உனைவேண்டி எட்டாச் செல்வம் எட்டிடுமே!
பட்டுத் தெளிந்த பக்தன்இவன் படட்டும் என்றே இருப்பாயோ!
எட்டாச் செல்வம் எட்டிடுமா? இங்கே பொன்மழை பொழிக அம்மா!
இல்லை எட்டாதங்கே போயிடுமோ? எட்டாச் செல்வம் எட்டுதற்கே
இங்கே பொன்மழை பொழிக அம்மா!
🕉️4. மருவத்தூரிலே வந்துதித்து
மங்காச் செல்வம் அளிப்பவளே!
மந்திரத்தமிழில் நீநின்று மனமும் கனிந்தே களிப்பவளே!
இகபரசுகமே எல்லார்க்கும் ஏற்கும்படியே தருபவளே!
மகனிவன் பணிந்தே கேட்கின்றேன் மழைபோல் செல்வம் தருவாயே!
🕉️5. எல்லார்போலவும் புகட்டுக்கா இங்கேபொன்மழை கேட்கின்றேன்? வல்லார்முன்போய் நில்லாமல்
வழங்குக பொன்மழை என்றேன்
நான்!
வறுமை ஒழிக்க ஒருபக்கம்
வளம்பல செய்ய மறுபக்கம்
வருவாய் தருவாய் என்றேநான்
வான்மழை போலக் கேட்கின்றேன்!
🕉️6. என்வலக் கையில் பொருளிருந்தால்
இல்லார்க்கெல்லாம் வழங்கிடுவேன்!
இதுவும் தாயே தந்ததென இவ்வுலகெல்லாம் முழங்கிடுவேன்! என் இடக்கையில் பொருளிருந்தால் இதுவும் தாய்நீ தந்ததென
எல்லார்க்கும்மே கொடுத்திடுவேன்!
ஏழாயிரம் கோடி தொடுத்திடுவேன்!
🕉️7. மருவத்தூரிலே மருவரசி
மனங்கவர் ஞானக் குருவரசி! மாதாவுனக்கே மகனாகி மண்ணில் வறியனாய்த் திரிவதுவோ! மருவரசி பெற்ற ஒரு பிள்ளை மனந்தான் குறுகிக் கூசுவதோ! மருவூர்ப பெருமை இதுவென்றே மற்றவர் கேலி பேசுவதோ?
🕉️8. ஆர்ஆர்வந்தார் அந்நாளில் அழகிய திருமிகு ஆரூரில்! ஊரார் வியந்து பாராட்டும் உன்திருத் தொண்டர்
உருள்வலத்தால்
பாரோர் மகிழ மழை தந்தாய் பாவிஎனக்கே ஆகாதோ? பரிதவித்து இங்கே நான் கிடந்தால் பராசக்தி மனந்தான் நோகாதோ!
🕉️9. உலகம் செழிக்கத் தாமரையில் உட்கார்ந்திருக்கும் திருமகளே! கலகம் செய்யும் மண்ணுலகில் கனகப் பொருளே பேசுதம்மா! கலக்கம் எனக்கும் வந்ததம்மா கையில் காசில்லை என்பதனால்! விளக்கம் தரவே பொன்மழையை விரைந்துநீயே பொழிக அம்மா!
🕉️10. வேம்பின் இலையை வீசியதால் காம்பின் பாலை நினைந்தளிக்கும் வெற்றியே விளைக்கும் திருமகளே! தேம்பும் பிள்ளை துயர் தீர்க்கத் தெய்வமே! பொன்மழை பொழிவாயே!
விளைந்த பொன்மழை யாமறிவோம்!
காராம் பசுவே ஆனவளே! வீம்பும் வேகமும் எனக்கில்லை
🕉️11. தர்மம் தழைக்கச் செய்திடுவேன் தாயுன் புகழைப் பாடிடுவேன்!
மர்மம் செய்யும் மாயத்தை மகன் இவனிடத்தும் செய்யாதே!
கடமை தன்னைச் செய்வதற்கே
கனகமழையும் பொழிவாயே!
கருணைமழையைப் பொழிபவளே கனகமழையும் பொழிவாயே!
🕉️12. பொன்மழை எனக்கே பொழிந்திட்டால் புறப்பட்டு விடுவேன் உனைநோக்கி! பண்மழை போலப் பாட்டிசைப்பேன் கண்டிப்பாக நான்வருவேன்! எட்டிய மட்டும் அவர் பணியை இவ்வுலகெல்லாம் செய்திடுவேன்!
பங்காரு அடிகள் பணிகேட்பேன்! கட்டிய துணியொன்று போதுமெனக்
🕉️13. சங்கரன் முன்னே பொழிய வைத்தாய்! வேதாந்த தேசிகர்க்கும் அவ்வாறே!
தன்கரம் கொண்டே இவனுக்கும் தங்கமழை இங்கே பொழிவாயே! வறுமை வாழ்க்கை விளிம்புக்கே வாடியே போகத் தெம்பில்லை! பெருமை உனக்கே சேருமம்மா பெய்க பொன்மழை நீதாயே!
🕉️14. கலைகள் எல்லாம் தருபவளே! கவலைகள் எனக்கே தருவதுமேன்?
விலையாய் எனையே ஏற்றிடுவாய்
விரைந்தே பொன்மழை
பொழிந்திடுவாய்!
வேய்ங்குழல் ஊதும் கண்ணன் போல்
விளங்குமுன் புகழை ஓதிடுவேன்! தாழ்குழல் மகளே! தாயவளே!
தங்கமழை இங்கே பொழிவாயே!
🕉️15. நாதமே! கீதமே! நன்மகளே!
நானிலம் ஆளும் பொன்மகளே! வேதமே! வித்தையே! வேம்பரசி! விரும்பியே 'தங்கமாய்' ஆனவளே! ‘பச்சைத் துளசியில் பசும்பொன்னைப் பார்த்திட ஆக்கித் தந்தவளே!'
இச்சை என்மேல் கொள்வாயே! இன்றே பொன்மழை பொழிவாயே!
🕉️16. வாடியபொழுதில் வண்டமிழில்
வழங்குக பொன்மழை எனக்கேட்டுப் நாடிய செல்வம் தர இங்கே நற்றமிழ் தன்னில் வேண்டி
பாடிய பாடல் படிப்பார்க்கும் பக்கம் நின்றே கேட்பார்க்கும்
நின்றேன்!
தேடிய செல்வம் தருவாயே!
தெய்வமே! பொன்மழை பொழிவாயே!
🕉️17. தாயான குருநாதர்
தயைபோலப் பொழிக அம்மா!
சேயான அவரன்பின்
சீர்போலப் பொழிக அம்மா!
மருவத்தூர் அடிகளாரின்
மனம்போல்ப் பொழிக அம்மா!
குருவான எம்மிறைவர்
குணம்போலப் பொழிக அம்மா!
🕉️18.சீர்மருவூர்ப் புகழ்போலச் சிறந்திங்கே பொழிக அம்மா!
நேர்நின்று அருள்பேசும்
நின்விழியால் பொழிக அம்மா! அருள்மழை பொழிகின்ற
ஆறுபோல் பொழிக அம்மா!
பொருள்மழை பொன்மழையாய்ப் புவியெலாம் பொழிக அம்மா!
🌼🌼🌼🌼🌼💠🌼🌼🌼💠🌼🌼🌼🌼🌼
வாழ்த்து!
-----------------
எண்ணருங் கலைகள் வாழி!
இறைவன் ‘நான்' என்னல் வாழி!
உண்ணிறை சக்திபீடம் கண்ணிறை மணியேயான கருமறைப் பொருளே வாழி!
'ஓம்' எனும் ஒலியில் வாழி!
தெண்டிரை உலகமெல்லாம் விண்டுனை வாழி! வாழி!
'ஓம் சக்தி'
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🔱🌺🌺🌺🌺🌺
No comments:
Post a Comment