Wednesday, May 19, 2021

கோரோனா விருந்து விடுபட உணவு வழிமுறைகள்


 உணவு வழிமுறைகள்:
               
கூழ் கஞ்சி:
 கம்பு, சோளம், கேழ்வரகு, திணை, வரகு, சாமை அகிய சிறுதானியங்களை
கஞ்சியாகவும் கூழாகவும் குடிக்க வேண்டும்.

கூழ்:
கம்பு, சோளம், கேழ்வரகு போன்ற தானியங்களை அரைத்து மாவாக்கி அந்த
மாவினை தேவையான அளவு எடுத்து நீரில் கரைத்து, குறைந்தது (6-8 மணி) 6 மணி
நேரம் புளிக்கவைத்து பின்பு அதை நொய் அரிசி சேர்த்தோ, சேர்க்காமலோ காய்ச்சி
வெந்தபின் ஆறவிட்டு, மோர், சிறுவெங்காயம் சேர்த்து கரைத்து குடிக்க வேண்டும்.
இவ்வாறு புளிக்கவைத்து செய்யப்படும் கூழில் மோர் சேர்த்து குடிக்கும் போது
உடலுக்கு தேவையான புரோபயாடிக் எளிதில் கிடைக்கின்றது. ராகிகூழில் மனஅழுத்தத்தை
குறைக்கும் விட்டமின் B சத்து கேழ்வரகில் உள்ளது. (தற்போது நமக்கு ஏற்படும் இந்த
மனபதட்டம் குறைக்க எளிதான உணவு கூழ்) கம்பங் கூழில் (Phytochemical) பைட்டோ
கெமிகல் உடலில் கொழுப்பு சத்தை சீராகவைக்கும். கூழில் அதிக அளவு நார் சத்து
உள்ளதால் பித்தப்பை கற்கள் உருவாக்காமல் உடலை காக்கும்.
கம்பங் கூழ் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் அபாயத்தை வெகுவாக குறையும்.
கூழில் உள்ள மினரல்கள் (தனிமங்கள்) எளிதில் குடலால் உறிஞ்சபட்டு நோய் எதிர்ப்பு
சக்தியை உடனே வழங்கும்.

கஞ்சி (சாமை, திணை, வரகு):
சிறுதானியங்களை தனி தனியாக வேகவைத்து கஞ்சாக காய்ச்சி குடிக்கலாம் அல்லது
சிறுதானியங்களை நன்றாக சேர்த்து மாவாக அரைத்து கஞ்சாக காய்ச்சி குடிக்கலாம்.

பயன்கள்:
1. செரிமான கோளாறு, கஞ்சியாக குடிப்பதால் நீங்கும் (எளிதில் சீரணமாகும்)
2. நார்சத்து அதிகம் உள்ளதால் மலசிக்கல் நீங்கும்
3. தாது உப்புக்கள் மக்னீசியம், கால்சியம், ஸின்க் (Zink) போட்டாசியம் ஆகிய
தாது உப்புகள் சிறுதானியங்களில் அதிகமாக உள்ளது. இவை நோய் எதிர்ப்பு சக்தியை
அதிகமாக்க கூடியவை.

தண்ணீர்:
தண்ணீரை நன்கு கொதிக்கவைத்து (நன்றாக கொப்புளம் வரும் வரை), பின் ஆறவைத்து வடிகட்டி பானையில் ஊற்றி குடிக்க வேண்டும்.
(நீரை நன்று கொதிக்க வைக்கும் போது சள சள என்று சத்தம் வரும்வரை கொதிக்க
வைத்தால், நீரில் உள்ள கிருமிகள் அழியும்)
பானையில் சூட்டுடன் நீரை எப்போதும் ஊற்றகூடாது.

இளநீர்:
இளநீர் பருக வேண்டும்
இளநீரில் போட்டாசியம், சோடியம், கால்சியம், விட்டமின் A, D விட்டமின் சி இரும்புசத்து
உள்ளது. உடல் சூட்டை தணிக்கும். இதில் உள்ள புரதசத்தும் விட்டமின்களும் நோய்
எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. தைராய்டை சரியாக சுரக்க வைக்கும். இளநீரில் உள்ள
சத்துகள் திரவநிலையில் சுக்ரோஸ் உடன் கலந்து உள்ளதால் உடலுக்கு உடனே நோய்
எதிர்ப்பு ஆற்றலை வழங்கும்.

சுண்ணாம்பு:
வெற்றிலை, பாக்குடன், சிறிதளவு சுண்ணாம்பு சேர்த்து சாப்பிடலாம்.
சிறிதளவு வெல்லத்தையும் தினமும் சாப்பிடலாம் வெல்லத்தில் அதிகஅளவு கால்சியம்
சத்து (சுண்ணாம்பு) உள்ளது. மேலும் இது தயாரிக்கும் போது அச்சுகளில் ஒட்டாமல்
இருக்கும் போருட்டும் சுண்ணாம்பு நீரை தடவி வெல்லம் தயாரிக்கப்படுவதால் சுண்ணாம்பு
சத்து வெல்லத்தில் மிகுதியாக உள்ளது.

வெல்லம்:
ஆண்டி அலர்ஜி செயல்பாடு உள்ளதால் சுவாச மண்டல கோளாறு வராது. சுண்ணாம்பு
சத்து சரியாக இருந்தால் எலும்புகள் வளர்ச்சி நன்றாக இருக்கும். எலும்புகளுக்கு உள்
இருக்கும் எலும்பு மஜ்ஜையில் தான் WBC எனப்படும் இரத்த வெள்ளை அணுக்கள்
உருவாகும். இதுவே நம் நோய் எதிர்ப்பு சக்திகான காரணமாகும். எனவே சுண்ணாம்பு
சத்துக்கு சிறிதளவு வெல்லம் தினமும் உண்டால் நோய் எதிர்ப்பு சக்தி பெருகும்.

கைகுத்தல் அரசி:
இரவே கைக்குத்தல் அரிசியை சாதமாக வடித்து அதில் தண்ணீர் ஊற்றி மறுநாள்
காலை சாப்பிட வேண்டும்.
கைக்குத்தல் அரிசியில் விட்டமின் B சத்து உள்ளது. இதை நீர் ஊற்றி இரவு
ஊறவைக்கும் போது, ஈஸ்ட் சேர்ந்து புளித்து இருப்பதால் எளிதில் சத்துகள் குடலினால்
உறிஞ்சபடும்.

பிராணவாயு:
சீசான பிராண வாயு சீராக இருக்க நொச்சி இலை, நுணா இலை, தைல இலை
(யூகலிப்டஸ்) வேப்பிலை சேர்த்து நீரில் கொதிக்கவைத்து ஆவிபிடிக்க வேண்டும்.
இவ்வாறு செய்வதால் சுவாச குழாய், மூக்கு, சுவாசபை அழற்ச்சி தடுக்கப்படும்.
சுவாசபையில் பிராணவாயு பரிமாற்றம் சீராக இருக்கும்.

பகலில்:
செடி மரங்கள் உள்ள இடத்தில் நடை பயணம் செய்ய வேண்டும்.

தூக்கம்:
நல்ல தூக்கம் அவசியம்.
ஏசி (A/C) (Fan) பேனில் உள்ள காற்று உடலுக்கு உஷ்ணத்தை ஏற்படுத்தும்.

உணவு கட்டுபாடு:
சாக்லேட், ஐஸ்கீரிம், குளிர்சாதன பெட்டியில் வைத்துள்ள பொருட்களை உண்ண
கூடாது.
பழைய எண்ணெய், கலப்பட எண்ணெயை சமையலுக்கு பயன்படுத்த கூடாது.
மசாலா, தாளிப்பு பொருட்களை சாப்பிடக்கூடாது.
பகல் எது இரவு எது என உணர்ந்து வாழ வேண்டும்.
இரவு முழுவதும் அலைபேசியில் பேசுவதும், டிவியை தொடர்ந்து பார்பது உடலை
பாதிக்கும்.
விஞ்ஞானத்தால் கண்டுபிடிக்கப்பட்ட அனைத்து பொருட்களும் விஷமாக மாறி அழிவை
ஏற்படுத்தும்.
சொல்வதை விளையாட்டு தனமாகவும், தூசி போலவும் அலட்சியமாக துடைத்து
எறிவதும் செய்ய கூடாது.
மாரியாத்தாப்போல் வந்த கொரோனாவை அலட்சியப்படுத்த கூடாது பறவைகளால்
வரும் பறவை காய்ச்சல் போல இது மனிதனால் பரவும் காய்ச்சல் இந்த சூழ்நிலையிலிருந்து
உங்களை காப்பாற்ற ஒரே வழி உணவு கட்டுபாடு, உடற்பயிற்சி மற்றும் தள்ளி தள்ளி
இருப்பது நல்லது.

கோரோனா என்கிற பெரிய
அம்மையில் இருந்து காப்பற்ற
அன்னை ஆதிபராசக்தி அருளிய
உணவு வழிமுறைகள்.கொரோனா மூன்றாம் அலையிலிருந்து பாதுகாத்துக்கொள்ள பின்பாற்ற வழிமுறை ஆகும்.

No comments:

Post a Comment